என் மலர்

  நீங்கள் தேடியது "Cinema Gossip"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த நடிகை ஒருவருக்கு தற்போது வாய்ப்பு ஏதும் இல்லாத நிலையிலும், வருத்தப்படாமல் பட வாய்ப்பை பெறுவது குறித்த ஆலோசனையில் இறங்கியிருக்கிறாராம். #Gossip
  சங்கத்தை மையமாக வைத்து உருவான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நான்கெழுத்து நடிகைக்கு கைவசம் தற்போது படங்கள் இல்லையாம். பட உலகில் தனது மார்க்கெட்டை இழந்தாலும் அதற்காக நாயகி வருத்தப்படவில்லையாம்.

  புதிய பட வாய்ப்புகளை பிடிப்பது எப்படி? என்பது குறித்து தனது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினாராம். அவர்களது ஆலோசனைப்படி அந்த தனது சம்பளத்தை பட வாய்ப்புகளுக்கு ஏற்ப கூட்டி, குறைக்க நாயகி முடிவு செய்திருக்கிறாராம். 

  பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தால், தனது லட்சத்தில் சம்பளம் வாங்கிக் கொள்ளலாம் என்றும், புதுமுக கதாநாயகர்களுடன் ஜோடி சேர கோடியில் சம்பளம் கேட்பதென்றும் அவர் முடிவெடுத்து இருக்கிறாராம். #Gossip

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவரான இரண்டெழுத்து நாயகன் காதலி சொல்லை மந்திரமாக என்கிறாராம். #Gossip
  இரண்டெழுத்து நாயகனும், நான்கெழுத்து நாயகியும் காதலை முறித்துக் கொண்டதாக கோலிவுட்டில் பேசப்படும் நிலையில், தற்போது அதில் உண்மை இல்லை என்றும், இருவரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு தான் அது என்றும் இருவருக்கும் நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியிருக்கிறாராம்.

  இருவரும் காதலர்கள் என்பது வெளியே தெரிந்தால், தனக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விடும் என்பதற்காக நாயகி இவ்வாறு கேட்டுக் கொண்டாராம். இருவரும் பேசி பிரிந்து விட்டதாக சொல்வோம். அதுதான் இருவருக்குமே நல்லது என்று நாயகி கூற, நாயகனான காதலன் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாராம். #Gossip

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகை தற்போது திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளாராம். #Gossip
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான அங்காடி நடிகையின் கைவசம் பல படங்கள் இருக்கிறதாம். இவர் நடிப்பில் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், திருமணம் குறித்து நடிகை யோசித்து வருகிறாராம்.

  நடிகைக்கும் வெற்றிக்கு மறுபெயரை தன் பெயராக கொண்ட கதாநாயகனுக்கும் இருந்ததாம். ஆனால் திடீரென்று நடிகை தன் காதலை முறித்துக் கொண்டாராம். இந்த நிலையில், தமிழ், தெலுங்கு என 2 மொழி படங்களிலும் இரவு-பகலாக நடித்து வந்த அவர், விரைவில் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலக முடிவு செய்து இருக்கிறாராம்.

  மணமகன் அவருடைய காதலரா, இல்லை வேறு நபரா? என்பதை அவர் ‘சஸ்பென்ஸ்’ ஆக வைத்து இருக்கிறாராம். #Gossip

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் ஒருவர் அறிமுக இயக்குநர் ஒருவரை புலம்ப வைத்துள்ளாராம். #Gossip
  கலகலப்பான படத்தில் அறிமுகமாகி, பின்னர் காசு, பணம் என ஆட்டம் போட்ட காமெடி நடிகருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததாம். சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவரின் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் சண்டைபோட்டாராம்.

  அவரது நடிப்பில் அடுத்ததாக பொது நலனுடன் ஒரு படம் ரிலீசாக இருக்கிறதாம். அந்த படத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். 

  படத்தின் புரமோஷனுக்கு கூப்பிட்டால் சார் வரமாட்டாரா என்று தெரியவில்லை. ட்விட்டரில் பேசுகிறார், நேரில் வரமாட்டாரா என்று இயக்குநர் மேடையிலேயே ஆதங்கப்பட்டுள்ளாராம். #Gossip

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வந்த நடிகையிடம், சினிமாவை விட்டு விலகிய நிலையில், சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க சில இயக்குநர்கள் அவரை அணுகிய போது மறுத்து விட்டாராம். #Gossip
  தமிழ் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து, முன்னணி நாயகியாக வளராவிட்டாலும், பிரபலமான தில்லான நடிகை, வளர்ந்து வரும் போது, திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்த வெளியேறினாராம்.

  அவரை கதாநாயகர்களுக்கு அக்காள் மற்றும் அண்ணி வேடங்களில் நடிக்க தமிழ் சினிமாவின் சில இயக்குநர்கள் அழைத்தார்களாம். மீண்டும் நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன். அக்காள், அண்ணி வேடங்களில் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று நடிகை உறுதியாக கூறிவிட்டாராம். #Gossip

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயக்குநராக அறிமுகமாகி முழுநேர நடிகராக மாறிவிட்ட நடிகர் ஒருவர் தான் அறிமுகம் செய்து வைத்த நாயகியை நடிக்க கேட்டதற்கு நாயகி மறுத்துவிட்டாராம். #Gossip
  தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நாயகியாக ஒரு ரவுண்டு வந்த நடிகை, நடிகருடனான திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு விலகினாராம். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் அந்த நடிகை தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடிக்கிறாராம்.

  தற்போது நாயகியின் கைவசம் ஒருசில படங்கள் உள்ளதாம். நாயகியை அறிமுகம் செய்துவைத்த இயக்குநர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம். அவர் தான் நடிக்கும் படத்தில் நடிக்க கேட்டதாகவும், நடிகை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நாயகி ஏற்கனவே படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் தான் நாயகி மறுத்துவிட்டாராம். இருந்தாலும் நாயகியை அறிமுகம் செய்து புகழை தேடித் தந்த இயக்குநர் படத்தில் நடிக்க வேண்டாமா என்று பேசுகிறார்களாம். #Gossip

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கு என கைவசம் சொல்லும்படியான படங்களை வைத்திருக்கும் நடிகை படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடு செல்கிறாராம். #Gossip
  சுவருக்காக சண்டை நடந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகையின் பூர்வீகம் கேரளாவாம். ஆனால் வளர்ந்தது, படித்தது எல்லாமே துபாய் தானாம். கைவசம் சொல்லும்படியான படங்களை நாயகி வைத்திருக்கிறாராம். தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். 

  படப்பிடிப்பு இல்லையென்றால் நாயகி வெளிநாட்டுக்கு பறந்து விடுகிறாராம். அவருடைய வெளிநாட்டு பயணம் மர்மமாக இருப்பதாக ஒரு தயாரிப்பு நிர்வாகி கூறினாராம். “அந்த பயணத்தில் மர்மம் எதுவும் இல்லை. அந்த நடிகைக்கு வெளிநாட்டு நண்பர்கள் அதிகம். அவர்களை சந்திக்கவே நாயகி வெளிநாடு செல்கிறார் என்று சக நடிகர் ஒருவர் அதனை தெளிவுபடுத்தியிருக்கிறாராம். #Gossip

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை கசிய விடுகிறாராம். #Gossip
  தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக ஒரு ரவுண்டு வந்த புஸ்புஸ் நாயகிக்கு கடந்த வருடம் சொல்லும்படியாக வாய்ப்பு இல்லையாம். தற்போது கைவசம் சொல்லும்படியான படங்களை வைத்திருக்கிறாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறாராம்.

  சமீபத்தில் தனது படத்தின் போஸ்டர் மூலம் சர்ச்சையில் சிக்கிய அந்த நாயகி, தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மற்றொரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறதாம். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை, வெளியான புகைப்படங்களை தடுக்கும் பணிகளில் இறங்கினாராம். எனினும் அந்த படங்கள் சமூக வலைதளங்கில் சுற்றிக் கொண்டே இருக்கிறதாம்.

  நாயகிக்கு வேண்டாதவர்கள் யாரோ பார்த்த வேலை தான் இது என்று ஒருசாரார் சொல்ல, வாய்ப்புக்காக நாயகியே தனது புகைப்படத்தை வெளியிட்டிருப்பார் என்று மற்றொரு சாரார் சொல்கிறார்களாம். எது தான் உண்மையோ தெரியவில்லையே என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். #Gossip

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி ஒருவர் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்த நிலையில், தற்போது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். #Gossip
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையாம். திருமணம் பற்றி கேள்வி கேட்டாலே, ‘டென்ஷன்’ ஆகிற அந்த நடிகை, இப்போது திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாராம். மாப்பிள்ளை பற்றி அவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லையாம். அம்மாவுக்கு பிடித்து இருந்தால் போதும். அவங்க சொல்கிற மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயார் என்று கூறிவிட்டாராம். 

  அதனால், நடிகையின் தாயார், மாப்பிள்ளை வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறாராம். இப்போதாவது சம்மதம் சொன்னாரே, விரைவில் கெட்டிமேளம் ஒலிக்கட்டும் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்களாம். #Gossip

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சினிமா, காதல் என பல்வேறு விஷயங்களால் அடிக்கடி கிசுகிசுக்கப்படும் நடிகர் ஒருவர், தற்போது புதிய வகை வம்பில் சிக்கிக் கொண்டுள்ளாராம். #Gossip
  சர்ச்சைக்கு பெயர்போன நடிகர், அறிமுகமான காலத்தில் நடித்த ஒரு படம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறதாம். அந்த நடிகரின் தந்தையும், இயக்குநருமானவர் சமீபத்தில் போலீஸ் நிலையத்தில் மனு கொடுக்க வந்த பிறகு தான் இந்த பிரச்சனை பூதாகரமாக கிளம்பியிருக்கிறதாம்.

  அந்த படத்தின் கதை தன்னுடையது என்றும், நடிகரும், நடிகரின் தந்தையும் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் படத்தை இயக்கிய இயக்குநர் சொல்லி வருகிறாராம். மேலும் பத்திரிகையாளர்களை அழைத்து அவர் இதுகுறித்து விளக்க இருந்தாராம்.

  இவ்வாறாக பிரச்சனை அடுத்த கட்டத்திற்கு நகர்வதால், பேச்சுவார்த்தை நடத்த அந்த இயக்குநரை அழைத்துள்ளார்களாம். இதையடுத்து அந்த இயக்குநர் தற்போது அமைதி காத்து வருகிறாராம். தமிழ் சினிமாவில் கதை திருட்டு பற்றி கேள்வி பட்டிருக்கிறோம், ஆனால் இது புது வகையாக இருக்கிறதே என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம். #Gossip

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வரும் அந்த நடிகை கதை தேர்வில் தனது காதலரின் சம்மதத்தை வைத்தே படத்தை தேர்வு செய்கிறாராம். #Gossip
  தமிழ், தெலுங்கு சினிமாவில் முதல் இடத்தில் இருக்கும் நடிகை கதை தேர்வுகளில் கவனமாக செயல்பட்டு வருகிறாராம். அவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதாம். 

  நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகவும், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறாராம். நாயகியின் சம்பளமும் ரூ.5 கோடிக்கு உயர்ந்திருக்கிறதாம்.

  சமீபத்தில் விலை உயர்ந்த கார் ஒன்நை வாங்கிய நடிகை, அந்த காரில் இயக்குநரான தனது காதலருடன் சென்னையை சுற்றி வந்தாராம். நடிகையின் கதை தேர்வு தான் அவரது வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார்களாம். அப்படி இருக்க நடிகை ஒப்புக்கொள்ளும் படங்களுக்கு நடிகையின் காதலர் தான் கதை கேட்கிறாராம். காதலருக்கு பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிக்க நாயகி ஒப்புக்கொள்கிறாராம். #Gossip

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விரைவில் திரைக்கு வரவிருக்கும் புதிய படத்தில் நாயகிகள் இருவர் போட்டி போட்டிக் கொண்டு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்களாம். #Gossip
  சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வரும் வாகை சூடிய நடிகர் அடுத்ததாக மச்சம் இருக்குற படத்தில் நடித்துள்ளாராம். கவர்ச்சியுடன் கூடிய காமெடி கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் வல்லவனுக்கு நடிகை படுகவர்ச்சியாக நடித்துள்ளாராம்.

  இந்த படத்தின் மூலம் ஆங்கில நடிகை ஒருவரும் தமிழில் அறிமுகமாகிறாராம். இந்த நடிகையும், வல்லவனுக்கு நாயகியும் கவர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்களாம்.

  படத்தின் முன்னோட்டத்தை வைத்து அடல்ட் படமாக இருக்குமோ என்று பலரும் கேட்க, படத்தில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும், இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்களாம். 

  இரண்டு நாயகிகள் போட்டி போட்டுக் கொண்டு படுகவர்ச்சி காட்டியிருப்பதால், படத்தில் கவர்ச்சியும், நகைச்சுவையும் அதிகம் எதிர்பார்க்கலாம் என்கிறார்களாம். #Gossip

  ×