என் மலர்
சினிமா

ஒருவழியாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி ஒருவர் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்த நிலையில், தற்போது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். #Gossip
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையாம். திருமணம் பற்றி கேள்வி கேட்டாலே, ‘டென்ஷன்’ ஆகிற அந்த நடிகை, இப்போது திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாராம். மாப்பிள்ளை பற்றி அவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லையாம். அம்மாவுக்கு பிடித்து இருந்தால் போதும். அவங்க சொல்கிற மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயார் என்று கூறிவிட்டாராம்.
அதனால், நடிகையின் தாயார், மாப்பிள்ளை வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறாராம். இப்போதாவது சம்மதம் சொன்னாரே, விரைவில் கெட்டிமேளம் ஒலிக்கட்டும் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்களாம். #Gossip
Next Story






