search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chemical waste"

    • சிரக்காடு வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
    • குப்பைகள் மழைநீரில் கலந்து அருகே உள்ள புதுக்குளம், அம்மாகுளம், கல்லுடைகுளம் ஆகிய 3 குளங்களும் மாசடைந்து தண்ணீரில் நச்சுத்தன்மை காணப்படுகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள சிரக்காடு வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

    அதிக குப்பைகள் சேர்ந்துள்ளதால் மலைபோல் காட்சியளிக்கிறது. இந்த குப்பை கிடங்கை சுற்றி 3000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

    குப்பை கிடங்கின் சுற்றுச்சுவர் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கிருந்து வெளியேறும் குப்பைகள் மழைநீரில் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    இதன் அருகே உள்ள புதுக்குளம், அம்மாகுளம், கல்லுடைகுளம் ஆகிய 3 குளங்களும் மாசடைந்து தண்ணீரில் நச்சுத்தன்மை காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் வனவிலங்குகளின் நடமாட்டமும் குறைந்துள்ளது. இப்பகுதியில் மான், காட்டெருமை, செந்நாய், மயில்,சிறுத்தை அதிகளவில் இருந்தது. தண்ணீர் மாசு காரணமாக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து விட்டன.

    சிரக்காடு பகுதியை சுற்றியுள்ள 3000 ஏக்கரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மாமரங்களிலும் பாதிப்புக்குள்ளாகி விளைச்சல் குறைந்துள்ளது. நகர் பகுதியில் மருத்துவகழிவுகள், இறைச்சி கழிவுகள் இங்கு கொட்டப்படுகின்றன.

    எனவே இதனை மீட்டு தண்ணீரை மாசின்றி சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×