search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauldron production"

    • குறைந்த மழை அதிக வெப்பம் போன்ற சீதோஷ்ண நிலை கொப்பரை உற்பத்திக்கு சாதகமாக உள்ளது.
    • தேங்காய் அதிக பட்சமாக கிலோ 28 ரூபாய் வரை விலை போகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டத்தில் கொப்பரை உலர் களங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் நிலவும் குறைந்த மழை அதிக வெப்பம் போன்ற சீதோஷ்ண நிலை கொப்பரை உற்பத்திக்கு சாதகமாக உள்ளது.

    கார்த்திகை மாதத்தில் அடைமழை காரணமாக கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டது. தேங்காய் சீசன் முடிவுறும் காலம் என்பதால் தேங்காய் வரத்தும் குறைந்தது. இதனால் கிலோ 73 ரூபாயில் இருந்து 90 ரூபாய் வரை விலை உயர்ந்தது.

    மழை சீசன் முடிந்ததும் விலை படிப்படியாக குறைந்தது. தற்போது கிலோ 80 ரூபாயாக உள்ளது. ஒரு மாதத்துக்கு முன் தேங்காய்க்கு ஓரளவு விலை கிடைத்தது. தற்பொழுது ஓட்டல் கடைகளில், சாம்பாருக்காக தேங்காய் அதிக அளவில் வெளியூருக்கு அனுப்பப்படுகிறது. வரத்தும் குறைவாக இருப்பதால் விவசாயிகள் விலையை குறைத்து கொடுப்பதை விரும்பவில்லை. தற்பொழுது தைப்பொங்கலுக்கு ஊருக்கு சென்ற தொழிலாளர்களும் கணிசமான அளவு பணிக்கு திரும்பி உள்ளனர். தற்பொழுது தேங்காய் அதிக பட்சமாக கிலோ 28 ரூபாய் வரை விலை போகிறது.

    விரைவில் சீசன் துவங்க உள்ளது. இதனால் விலை குறையும் என்ற அச்சம் வியாபாரிகள் மத்தியில் நிலவுகிறது. மார்க்கெட்டுக்கு அனுப்பப்படும் விலைக்கு வாங்கினால் நஷ்டம் ஏற்படும் என்பதால் உலர்கள உரிமையாளர்கள் தேங்காய் கொள்முதல் செய்வதை குறைத்துள்ளனர். இதனால் கொப்பரை உற்பத்தி மந்தகதியில் நடக்கிறது.

    ×