search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case against workers"

    • கண்ணாடிகள் ஒன்றோடு ஒன்று மோதி உடையாமல் இருக்க இடை இடையே தெர்மாகோல் வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
    • 15 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட ஒரு பெரிய கண்ணாடியை தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு ஏற்றினர்.

    கோவை :

    கேரவை செல்வபுரம் அருகே உள்ள திருநகர் முதல் தெருவில் ராகேஷ் மேத்தா, கஜேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான கண்ணாடி குடோன் உள்ளது.

    இந்த குடோனுக்கு லாரியில் கண்ணாடிக ள்கொண்டு வரப்பட்டன. கண்ணாடிகளை ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுகொண்டு இருந்தனர். அப்ேபாது திடீரென 15 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட ஒரு பெரிய கண்ணாடியை தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு ஏற்றினர்.

    பின்னர் அந்த கண்ணாடிகள் ஒன்றோடு ஒன்று மோதி உடையாமல் இருக்க இடை இடையே தெர்மாகோல் வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென ஒரு பெரிய கண்ணாடி லாரிக்குள்ளேயே சரிந்து விழுந்தது. இதில் கோவை கரும்புக்க டையை சேர்ந்த பாபு என்ற முஸ்தபா (வயது 52), செல்வ புரத்தை சேர்ந்த அபுதாகீர் (55) ஆகிய 2 தொழிலாளர்கள் கண்ணாடிக்கு அடியில் சிக்கினர். அந்த கண்ணாடி உடைந்து அவர்களின் உடலில் பல இடங்களில் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் ஷாஜகான், அபுதாகீர் ஆகியோர் காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் செல்வபுரம் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணாடி குத்தி உயிரிழந்த முஸ்தபா, அபுதாகீர் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து செல்வபுரம் போலீசார் கண்ணாடி கடை உரிமையாளர்கள் ராகேஷ் மேத்தா, கஜேந்திரன் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×