search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brazil island"

    பிரேசில் நாட்டில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்த தீவில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார்.
    பிரேசிலியா:

    பிரேசில் நாடில் பெர்னான்டோ டி நொரோன்கா என்ற தீவு உள்ளது. அது நடால் நகரில் இருந்து 370 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

    மிகவும் ஒதுக்குப்புறமாக உள்ள இந்த தீவில் 3 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இங்கு ஆஸ்பத்திரி உள்ளது. ஆனால் பிரசவ வார்டு மட்டும் இல்லை. ஏனெனில் குழந்தை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அங்கு எந்த பெண்ணும் குழந்தை பெறுவதில்லை.

    இந்த நிலையில் 12 ஆண்டுக்கு பிறகு இந்த தீவில் ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கு 22 வயது இருக்கும். அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

    அவருக்கு குழந்தை பிறப்பு என்றால் என்ன என்று தெரியாத நிலையில் இருந்தார். வீட்டில் இருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்படவே பாத்ரூம் சென்ற அவர் அலறினார். உடனே அங்கு ஓடிச்சென்ற கணவர் அவருக்கு பிரசவம் பார்த்தார். பின்னர் அப்பெண்ணும், குழந்தையும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    பல ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் தீவில் பிறந்த குழந்தையை அங்குள்ள மக்கள் கொஞ்சி மகிழ்கின்றனர். துணிகள் உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து அக்குடும்பத்துக்கு உதவுகின்றனர்.
    ×