search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barren lands can be converted to package cultivation and utilized- Collector information"

    தரிசு நிலங்களை தொகுப்பு சாகுபடிக்கு மாற்றி பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
    பர்கூர்,

    தரிசு நிலங்களை தொகுப்பு சாகுபடிக்கு மாற்றி பயன் பெறலாம் என கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.

    பர்கூர் அடுத்த ஜிஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குட்டூரில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்தார். பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து விவசாயிகளுக்கு தென்னை கன்றுகள், வேளாண் இடுபொருட்கள் மற்றும்ம ருந்து தெளிப்பான் கருவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:-

    தமிழகத்தில் ஊராட்சிகள் முழு ஆற்றலுக்கேற்ப வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தில் வேளாண்மை, உழவர் துறை, வேளாண் பல்கலைகழகம், ஊராட்சி, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட பல துறைகள் பங்கு பெற்றுள்ளன. தரிசு நிலங்களை தொகுப்பாக சாகுபடிக்கு கொண்டு வருதல், பாசன நீர்ஆ தாரங்களை உருவாக்குதல், சூரிய மின்சக்தி மோட்டார்களை தொகுப்பு நிலங்களில் அமைத்தல், நுண்ணீர் பாசனம் அமைத்தல், வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல், கால்நடை நலன்காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகளவு பயிர் கடன்கள் வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற திட்டப்பணிகளும் இதில் அடங்கும்.

    தரிசு நில மேம்பாடு, பயிர்கள் உற்பத்தி பெருக்குதல், மானாவாரி சாகுபடியை மேம்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தபட உள்ளன. தோட்டக்கலைத்துறை சார்பாக பழைய மா தோட்டம் பராமரிப்புக்காக, 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களை சீரமைத்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
    இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர்ம ணிமேகலை நாகராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×