search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ARGUMENT WITH POLICE"

    • திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வீட்டு மனை கேட்டு மனு கொடுக்க வந்தவர்கள் போலீஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
    • கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்து, போராட்டங்கள் நடத்தி இருக்கின்றோம்

    திருச்சி:

    திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழைப்பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று ஹெச்.எம்.கே.வி. மாநில செயலாளரும், ஜனநாயக ஜனதா தளம் மாநில சிறுபான்மை பிரிவு தலைவருமான ராபர்ட் கிறிஸ்டி தலைமையில் வீடு கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

    அப்போது கலெக்டர் அலுவலக பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் மனு அளிக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ராபர்ட் கிரிஸ்டி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் காவல்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    இது தொடர்பாக மனு அளிக்க வந்த பெண்கள் கூறும் போது, நாங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந்தேதி திருச்சி வருவதாக தகவல் கிடைத்தது.

    அப்போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு, வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம்.

    கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்து, போராட்டங்கள் நடத்தி இருக்கின்றோம். தாசில்தாரிடம் உரிய ஆவணங்களுடன் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    ஆனால் எந்த ஆட்சியாளர்களும் எங்களை கண்டுகொள்ளவில்லை. மனு அளிக்க கூட காவல்துறை அனுமதி மறுத்தது வேதனை அளிக்கிறது என்றனர்.


    ×