search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arani fire accident"

    ஆரணி அருகே பெயிண்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
    ஆரணி:

    ஆரணி லட்சுமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் பெயிண்ட் கடை மற்றும் குடோன் ஒன்றை வாடைகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மணிகண்டன் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது குடோனில் மின் கசிவு ஏற்பட்டு தீபற்றி எரிந்து புகை மூட்டம் வெளியே வந்து கொண்டிருந்தது.

    இதனை கண்ட அப்பகுதியினர் இது குறித்து மணிகண்டனுக்கு தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் ஆரணி, மற்றும் சேத்துப்பட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி குடோனில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. பின்னர் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டம் ஆரணி அருகே அரசு பள்ளி சமையல் அறையில் கியாஸ் கசிந்து தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆரணி:

    ஆரணி அடுத்த மாமண்டூர் காலனி பகுதியில் இயங்கி வரும் அரசு தொடக்க பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு மதியம் உணவு தினசரி சமைக்கப்படுகின்றது. வழக்கம் போல் சமையலர் லலிதா நேற்று சமைத்து கொண்டிருந்தார். அதனை அமைப்பாளர் மாலதி மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை சமையலர் சரிவர கவனிக்காமல் சமையல் செய்து கொண்டிருந்தார். அறை முழுவதும் எரிவாயு கசிந்து விட்டதால் திடீரென சிலிண்டர் தீயிட்டுகொளுந்துவிட்டு எரிந்தது.

    இதனால் பதறியடித்து சமையலர் மற்றும் அமைப்பாளர் ஆகியோர் சமையல் அறையை விட்டு வெளியே ஓடிவந்து கூச்சலிட்டனர்.

    மேலும் இதனை கண்ட பொதுமக்கள் பள்ளி முன்பு குவிந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டும் அணைக்க முடியவில்லை. பின்னர் தகவலறிந்து வந்த ஆரணி தீயணைப்புதுறையினர் சிலிண்டர் மீது கோணிப்பை போட்டு தீயை அணைத்தனர். பின்னர் தீயை எப்படி கட்டுபடுத்த வேண்டும் என்று சமையலர் மற்றும் அமைப்பாளருக்கு தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர்.
    ×