search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Work Intensity"

    தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது முதல் போக நெல் பாசனம் மும்முரமாக நடந்து வருகிறது.
    கம்பம்:

    கேரள மாநிலத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து இடைவிடாது பெய்து வரும் கன மழையினால் 10 பேர் உயிழந்துள்ளனர். இதே போல கேரளாவில் மட்டும் ஒரே நாள் மழைக்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த மழையின் தாக்கம் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழையாக பெய்து வருகிறது. சுருளி அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை விடப்பட்ட நிலையில் ஏராளமானோர் சுருளி அருவியில் வந்து நீராடிச் சென்றனர்.

    மேலும் ஆடி அமாவாசை நெருங்க உள்ளதால் சுருளி அருவிக்கு அதிக அளவு பொதுமக்கள் வருகை தருவார்கள். தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது முதல் போக நெல் பாசனம் மும்முரமாக நடந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கம்பம், கூடலூர் குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, காமையகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து பின்பு நடவு பணிகளை மேற்கொண்டனர்.

    கடந்த 20 நாட்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு இடையே வளர்ந்த களைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக தேனி, சின்னமனூர், கம்பம், போடி, கூடலூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    ×