search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK lit a ghee lamp in the temple. MLA worship"

    • விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து 4 அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவில் செயல்படுத்திடும் வகையில், ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவில் செயல்படுத்திடும் வகையில், ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி நிர்வாகத்து றையின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அதிகாரி ழயகளுடனான ஆய்வு கூட்டம் விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

    அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூடுதல் தலைமைச் செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், மேலாண்மை இயக்குநர்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) தட்சிணாமூர்த்தி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் பிரவின்குமார், எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன் , சிவகாசி அசோகன், சாத்தூர் ரகுராமன், ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம், வத்திராயிருப்பு, டபிள்யூ.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், எஸ்.கொடிக்குளம், சேத்தூர், செட்டியார்பட்டி ஆகிய 9 பேரூராட்சிகள், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துர், சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் சிவகாசி மாநகராட்சி.

    ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி, அபிராமம், மண்டபம், ஆர்.எஸ்.மங்களம், தொண்டி ஆகிய 7 பேரூராட்சிகள், ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை பரமக்குடி ஆகிய 4 நகராட்சிகள் என அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல் அலுவலர்கள் மற்றும் ஆணையாளர்களிடம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடைமுறை சிக்கல்கள் குறித்தும், தங்கள் பகுதிகளில் தேவைப்படும் திட்டங்கள் குறித்தும் தனித்தனியாக அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

    உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட சாலை வசதி, குடிநீர், சுகாதாரம், நீர்த்தேக்க தொட்டிகள், பஸ் நிலையம், பேவர் பிளாக், பாதாள சாக்கடை, மயானம், குடிநீர் குழாய் சீரமைத்தல், அனைவருக்கும் வீடு, பூங்கா மேம்பாடு, கூட்டுக்குடிநீர் திட்டம், மின்சாரம், தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்காக நடப்பாண்டில் சுமார் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை அமைச்சர்கள் வழங்கினர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாநகராட்சி ஆணையர்கள், மாநகர பொறியாளர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள், மண்டல செயற்பொறியாளர்கள், நகராட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×