search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wimbledon Final"

    • புல்தரை மைதானமான இந்த போட்டியில் நான் தோல்வி அடைவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை.
    • என் மகன் இன்னும் சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. நேற்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 2-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

    இந்நிலையில் தோல்வி குறித்து கண்ணீர் விட்டு ஜோகோவிச் பேசியது சுற்றி இருந்தவர்களை உருக செய்தது.

    தோல்வி குறித்து ஜோகோவிச் கூறியதாவது:-



    20 வயதில் முதிர்ச்சி அடைந்த வீரர் போல் அல்காரஸ் அபாரமாக விளையாடினார். அவரது மன உறுதியை பாராட்டுகிறேன். பலம் மற்றும் பலவீனங்களை கொண்டுள்ள ஒரு முழுமையான வீரராக திகழ்கிறார். அவரது சர்வீஸ்கள் சிறப்பாக இருந்தது.

    விம்பிள்டன் பட்டத்தை பெற அவர் தகுதியானவர். விம்பிள்டனில் சவால் நிறைந்த இறுதிப் போட்டிகளில் இதற்கு முன்பு நான் வெற்றி பெற்று இருக்கிறேன். அதில் 2 போட்டிகளில் நான் தோல்வியை தழுவி இருக்க வேண்டியது. புல்தரை மைதானமான இந்த போட்டியில் நான் தோல்வி அடைவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை.

    2019 இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரருக்கு எதிராக தான் வெற்றி பெற்றிருக்கக் கூடாது. அதற்கான பழிவாங்கல் தான் இன்று என்னை அல்கராஸ் வீழ்த்தியது.

    மேலும் ஜோகோவிச் நேர்காணலை நிறுத்துவதற்கு முன் கண்ணீர் சிந்தி அழுதார்.

    ஆமாம், என் மகன் இன்னும் சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. லவ் யூ, என்னை ஆதரித்ததற்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை, இது போன்ற போட்டிகளில் நாம் ஒருபோதும் தோற்க விரும்புவதில்லை. ஆனால் நன்றாக தெரியும், இந்த கன நேர உணர்ச்சிகள் எல்லாம், தீர்ந்த பின்னர் நான் மிகவும் பெருமை உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் கடந்த காலங்களில் பல நெருக்கமான போட்டிகளில் வென்று பட்டத்தையும் வென்றுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×