search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vels university"

    • ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார்.
    • பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, வருகிற 13-ந்தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார்.

    இந்த விழாவில், நடிகர் ராம்சரண் கலை சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த விருதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் டி.ஜி.சீத்தாராம் வழங்குகிறார். பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

    தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் 'ரங்கஸ்தலம்', 'தூபான்', 'துருவா', 'ஆச்சார்யா' போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்.' படம் இவருக்கு பான் இந்தியா ஸ்டார் அந்தஸ்த்தையும் வழங்கியது. அந்த படத்தில் இவரது நடிப்பும், நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    ராம்சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தில் நடிக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 75 மாணவர்களுக்கு தங்க பதக்கத்தையும் 169 மாணவர்களுக்கு பி.எச்.டி. பட்டத்தையும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
    • 4305 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

    விழாவில் 75 மாணவர்களுக்கு தங்க பதக்கத்தையும் 169 மாணவர்களுக்கு பி.எச்.டி. பட்டத்தையும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். மேலும் 4305 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில் பிற துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளான ஆர்.எம்.கே. கல்வி குழுமத்தின் நிறுவன தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம், ப்ரஸ் ஒர்க் நிறுவனத்தின் உரிமையாளர் கிரிஷ் மாத்ரு பூதம், கோவை இந்துஸ்தான் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை பேராசிரியர் டாக்டர் எம். ராமலிங்கம், இந்திய தடகள கூட்டமைப்பின் துணை தலைவரும் இந்திய தடகள வீராங்கனையுமான அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

    விழாவில் வேல்ஸ் பல்கலை கழக நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், இணை வேந்தர் முனைவர் ஆ. ஜோதி முருகன், இணை வேந்தர் டாக்டர் ஆர்த்தி கணேஷ், வேல்ஸ் குழு மத்தின் துணை தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ், துணைவேந்தர் முனைவர் ஸ்ரீமன் நாராயணன், இணை துணை வேந்தர் முனைவர் மு. பாஸ்கரன், பதிவாளர் முனைவர் பெ. சரவணன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் அ. உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள், புல முதல்வர்கள், இயக்குனர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு குறித்து ஆய்வுசெய்து இயக்குனர் பாண்டியராஜன் தாக்கல் செய்த கட்டுரைக்கு டாக்டர் பட்டத்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
    சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் கலந்து கொண்டார்.

    பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் 1949-முதல் 2000-ம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு குறித்து ஆய்வுசெய்து தாக்கல் செய்த கட்டுரைக்கு டாக்டர் பட்டம் (பிஎச்.டி) வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் பாண்டியராஜனுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார். விழாவில் பல்கலைக்கழக துணை தலைவர் ஆர்த்தி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×