search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Use of buildings"

    • கிராமங்களில் வசதியில்லை. எனவே கிராமந்தோறும் சேவை மையம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்த திட்டமிட்டது.
    • கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் கட்டிடங்கள் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் உள்ள கிராமப்புற மக்கள் வருவாய்த்துறை, வேளாண்துறை உட்பட பல அரசுத்துறை திட்டங்கள், மானியங்கள் பெற அருகில் உள்ள நகரப்பகுதிக்கு சென்று விண்ணப்பங்களை வாங்கி சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

    மேலும் மின்கட்டணம் உட்பட கட்டணங்களை செலுத்தவும், கிராமங்களில் வசதியில்லை. எனவே கிராமந்தோறும் சேவை மையம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்த திட்டமிட்டது.அதன்படி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தலா 14 லட்சம் ரூபாய், ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊரக வளர்ச்சி துறை வாயிலாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் கட்டிடங்கள் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. சில கட்டிடங்கள் குடிமகன்கள் கூடாரமாகியுள்ளது. குடியிருப்பிலிருந்து தள்ளி கட்டப்பட்ட மைய கட்டிடங்களிலிருந்து கட்டுமான பொருட்கள் மற்றும் ஜன்னல் போன்றவற்றை காப்பாற்றவே ஊராட்சி நிர்வாகத்தினர் போராட வேண்டியுள்ளது.விரைவில் சேவை மைய பராமரிப்புக்கு ஆட்களை நியமிக்காவிட்டால் கட்டடங்களை பாதுகாப்பது சிரமமாகி விடும்.

    பல்வேறு ஆன்லைன் சேவைகளை பெற அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. நகரிலுள்ள மையங்களில் கூட்ட நெரிசல் காரணமாக நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளது.எனவே கிராமங்களில் கட்டப்பட்ட சேவை மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து ஆன்லைன் சேவைகளை எளிதாக பெற திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.

    ×