search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Universe boss"

    ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதை பெற்ற வீரர்கள் வரிசையில் கிறிஸ் கெய்லை நெருங்குகிறார் டி வில்லியர்ஸ். #IPL2019
    ஐபிஎல் கிரிக்கெட்டில் ரசிகர்களை சிக்சர்கள் விளாசி குதூகலப்படுத்துவதில் ‘யுனிவர் பாஸ்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் இன்னும் ஜாம்பவானாக திகழ்கிறார். அவருக்கு ‘மிஸ்டர் 360’ என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் எந்த வகையில் சளைத்தவர் அல்ல.

    நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ஏபி டி வில்லியர்ஸ் 44 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 82 ரன்கள் குவித்து ஆட்மிழக்காமல் இருந்தார். கிறிஸ் கெய்ல் 10 பந்தில் 23 ரன்கள் அடித்தார்.



    82 ரன்கள் விளாசி ஆர்சிபி-யின் ஸ்கோர் 202 ரன்கள் உயர காரணமாக இருந்ததால் ஏபி டி வில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் இது ஏபி டி வில்லியர்ஸின் 20-வது ஆட்ட நாயகன் விருதாகும்.



    கிறிஸ் கெய்ல் 21 ஆட்ட நாயகன் விருதுடன் முதல் இடத்தில் உள்ளார். இவர் சாதனையை சமன் செய்ய டி வில்லியர்ஸ்க்கு இன்னும் ஒரு விருதுதான் தேவை. ரோகித் சர்மா, எம்எஸ் டோனி, டேவிட் வார்னர், யூசுப் பதான் ஆகியோர் 16 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்று 3-வது இடத்தில் உள்ளனர்.
    சிக்சர் மன்னன் என்று அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கிறிஸ் கெய்ல் இன்று 40-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். #ChrisGayle
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். 1999-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இடது கை பேட்ஸ்மேன் அன இவர், தனது அதிரடி பேட்டிங் மூலம் உலகளவில் பிரபலமானார்.

    டி20 லீக் தொடர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் சிக்சர்களாக விளாசி ரசிகர்களை கவர்ந்தார். பெரும்பாலான டி20 லீக் தொடர் இவராலேயே புகழ்பெற்றது. இவரை சிக்சர் மன்னன் என்றும் யுனிவர்ஸ் பாஸ் என்றும் அழைப்பது உண்டு.

    1979-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி ஜமைக்கா கிங்ஸ்டனில் பிறந்த இவருக்கு இன்றுடன் 39 வயது பூர்த்தியாகிவிட்டது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் கிறிஸ் கெய்ல் 40-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார்.



    வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 சதம், 37 அரைசதங்களுடன் 7214 ரன்கள் அடித்துள்ளார். 284 ஒருநாள் போட்டியில் 23 சதங்களுடன் 9727 ரன்கள் அடித்துள்ளார். 56 டி20-யில் 2 சதம், 13 அரைசதங்களுடன் 1607 ரன்கள் அடித்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக 346 டி20 போட்டிகளில் 21 சதம், 71 அரைசதங்களுடன் 11737 ரன்கள் குவித்துள்ளார். உலகம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
    ×