search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tribes"

    • நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
    • இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சத்துப்பள்ளி மண்டலம் ராய பாலம் கிராமத்தில் பழங்குடியினர்கள் வசித்து வருகின்றனர்.

    நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது.

    இதனை அறிந்த சத்து பள்ளி போலீசார் பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க அங்கு வந்தனர். இரு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றனர்.

    அப்போது ஆத்திரம் அடைந்த பழங்குடியினரின் ஒரு தரப்பினர் கம்புகளால் போலீசாரை தாக்கினர். அதிலும் குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஒருவரை பைக்கில் இருந்து கீழே இழுத்து தள்ளினர். அவரை கம்பு மற்றும் கைகளால் புரட்டி எடுத்தனர். அங்கிருந்த போலீசாரால் இதை தடுக்க முடியவில்லை.

    இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.

    இதனால் போலீசார் இன்ஸ்பெக்டரை மீட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் இன்ஸ்பெக்டர் உட்பட மேலும் சில போலீசார் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பழங்குடியினர் குறிப்பாக ஒரு இன்ஸ்பெக்டரை மட்டும் குறிவைத்து அதிக அளவில் தாக்கியது ஏன் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்ல. இன்ஸ்பெக்டரை குறி வைத்து தாக்கியதில் சதி செயல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டரை பழங்குடியினர் விரட்டி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • 2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • மணிப்பூரில் மேய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

    மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைத்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம். இதன்படி மெய்தி இனத்தினர் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலேயே சேர்க்கப்படுவர்.

    2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பிறகு மணிப்பூரில் மெய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

    உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மணிப்பூர் பழங்குடியினர் சங்கம் மறு ஆய்வு செய்தது. அவ்வழக்கின் தீர்ப்பில், தனது உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

    அத்தீர்ப்பில் பழங்குடியினர் பட்டியலில் மாற்றம் செய்யவும், திருத்தவும் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றம் சுட்டி காட்டியது.





    • இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது- ஆஸ்திரேலியா பிரதமர்.
    • நான் பார்த்ததில் இது மிகப்பெரிய மோதல்- போலீஸ் அதிகாரி.

    பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா அருகில் உள்ளது பப்புவா நியூ கினியா தீவு. இந்த பகுதியை சுற்றி ஏராளமான தீவுகள் உள்ளன.

    பப்புவா நியூ கினியா தீவில் அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். நேற்று பழங்குடியினரைச் சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    "இந்த சண்டை அந்த தீவின் எங்கா மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. நான் பார்த்ததில் இது மிகப்பெரிய மோதல்" என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    "பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது" என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

    மேலும், "பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்பிற்காக போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கணிசமான ஆதரவுகளை அளித்து வருகிறோம்" என்றார்.

    பசிபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் இன்னும் மனிதத் தொடர்பில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்கள்.

    இதே எங்கா மாகாணத்தில் கடந்த வரும் நடைபெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணியிடங்களை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது சமூகநீதி பேசும் அரசுக்கு அழகல்ல.
    • 10,400 பின்னடைவு பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒடுக்கீடு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னடைவுப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இன்று வரை அவற்றில் ஒரே ஒரு பணியிடம் கூட நிரப்பப்படாதது கண்டிக்கத்தக்கது.

    ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது சமூகநீதி பேசும் அரசுக்கு அழகல்ல. தமிழக அரசு இனியாவது அதன் சமூகநீதிக் கடமைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையில், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான 10,400 பின்னடைவு பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டர். அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • பழங்குடியினர் நல அலுவலகத்தில் 13.11.2023 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

    திருவாரூர்,

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டர். அம்பேத்கர் விருதை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

    இதனைத்தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டிற்கான டாக்டர்.அம்பேத்கர் விருது அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்கள், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோரில், இந்த ஆண்டு டாக்டர். அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று உரிய சான்றுகளுடன் வரும் 13.11.23 தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.

    இத்தகவலை திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகளை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் இங்கு நேரடியாக வந்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் மலையாளி இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

    கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய பணியில் ஈடுபட்டு வரும் இம்மக்களுக்கு வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழில் இதர வகுப்பினர் (ஓசி) என வழங்கப்படுகிறது.

    இதே மலையாள இனத்தை சேர்ந்த மக்கள் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த மாவட்டங்களில் வருவாய் துறை மூலம் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (எஸ்டி)எனக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் தங்களுக்கு இதர வகுப்பினர் என சாதி சான்றிதழ் வழங்கப்படுவதற்கு பதிலாக தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இதற்காக அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

    இதனால் மலையாளி இனத்தை சேர்ந்த மலை கிராம மக்கள் அரசு பணி மற்றும் அரசிடமிருந்து கிடைக்கப்படும் உதவிகள் எதுவும் வராததால் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாக கடம்பூர் மலையாளி பழங்குடியின சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தங்கள் குழந்தைகளை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று காலை கடம்பூர் பஸ் நிலையம் அருகே மிகப்பெரிய அளவில் சாமியான பந்தல் அமைத்து அதில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரிகளும் முன்வராததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடம்பூர் பெட்ரோல் பங்க் அருகே சக்தி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோபி ஆர்.டி.ஓ பிரியதர்ஷினி சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் இங்கு நேரடியாக வந்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.

    இதனால் போராட்டம் இரவு வரை தொடர்ந்து நடந்தது. இரவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. தொடர்ந்து இரவு போராட்டம் நீடித்தது.

    இந்நிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கடம்பூருக்கு நேரடியாக வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் எங்களுக்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, இதற்கு முன்பு இருந்த கலெக்டர் ஏற்கனவே இது சம்பந்தமாக ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் அனுப்பி உள்ளார். நானும் உங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் பேசி அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

    எனவே உங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிடுங்கள் என்றார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் 14 மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.265 கோடி பயன்படுத்தப்படவில்லை.
    • பல்வேறு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையாமல் உள்ளது.

    மதுரை

    மதுரையைச் சார்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற பதிலில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் பழங்குடியினர் நலத்துறைக்கென்று பிரத்யேகமாக தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மற்றும் இயக்குநரகம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பழங்குடி யினர் ஆன்றோர் மன்றத்தின் செயல்பாடுகள் மாற்றிய மைக்கப்பட்டு புதிய அர சாணை வெளியிடப் பட்டது.

    அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சர் தலைவராக கொண்டு அவரின் கீழ் செயலர், இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர்கள், பழங்குடியின அலுவல்சாரா உறுப்பினர்கள், பழங்குடியினர் அல்லாத அலுவல்சாரா உறுப்பினர்கள் என்று மொத்தம் 20 பேர் கொண்ட நிபுணர்கள் குழு 2018 பிப்ரவரி மாதத்தில் நியமிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 1.2.2021 அன்று இந்த மன்றத்தின் பதவி காலம் முடிவடைந்து. அதன் பின்னர் 27 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இன்றுவரை ஆன்றோர் மன்றத்திற்கான கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனை தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்கு நரகத்தின் பொது தகவல் அலுவலர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

    வீட்டு மனைப்பட்டா, தாட்கோ கடன், குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி, சாலை வழி அமைத்தல், கல்வி நிலையங்கள் மருத்துவமனை அமைத்தல் போன்ற முக்கிய தேவை களை அறிந்து அவற்றை பூர்த்தி செய்வதற்கு அரசுக்கு ஆலோசனை வழங்குவது ஆன்றோர் மன்ற உறுப்பி னர்களின் பணியாகும்.

    இந்த நிலையில் ஆன்றோர் மன்றம் செயல் படாமல் உள்ளதால் பல்வேறு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையாமல் உள்ளது.சான்றாக தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.265 கோடி நிதி பயன்படுத்தாமல் அரசு கஜானாவிற்கே திருப்பி ஒப்படைப்பு செய்யப்பட்டு வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 60 குடும்பம் வீடுகள் இல்லாதது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்தார்.
    • அங்கன்வாடி மையத்தை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆய்வு செய்தார்.

    திருவள்ளூர்:

    மீஞ்சூர் அடுத்த நந்தியம் பாக்கம் ஊராட்சியில் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இவர்களின் ஜாதி சான்றிதழ், இருப்பிடம், அடிப்படை தேவைகள், உள்ளிட்டவைகள் குறித்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது 60 குடும்பம் வீடுகள் இல்லாதது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக அதே பகுதியில் அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருவதாகவும் அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் அங்கன்வாடி மையத்தை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆய்வு செய்தார்.

    ×