அம்பேத்கர் விருதை பெற விண்ணப்பிக்கலாம்

அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டர். அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.பழங்குடியினர் நல அலுவலகத்தில் 13.11.2023 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
கலெக்டர் சாருஸ்ரீ. 
கலெக்டர் சாருஸ்ரீ. 
Published on

திருவாரூர்,

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டர். அம்பேத்கர் விருதை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

இதனைத்தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டிற்கான டாக்டர்.அம்பேத்கர் விருது அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படுகிறது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்கள், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோரில், இந்த ஆண்டு டாக்டர். அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று உரிய சான்றுகளுடன் வரும் 13.11.23 தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.

இத்தகவலை திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com