என் மலர்
நீங்கள் தேடியது "மெய்தி"
- மெய்தி மக்களின் ஷிருய் விழா விழா கடந்த 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது.
- பத்திரிகையாளர்களுடன் மாநில பேருந்தில் மணிப்பூர் பெயர் மறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு.
மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி பிரிவினருக்கு இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநராக அஜய் குமார் பல்லா இருந்து வருகிறார். இவர் டெல்லிக்கு சென்றிருந்தார்.
இவருக்கு எதிராக மெய்தி சமூகத்தினர் போராட்ட பேரணி நடத்த இருந்தனர். இதனை பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தியதுடன். கலைந்து செல்ல கண்ணீர் புகைக்குண்டு வீசியது பேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெய்தி சமூகத்தினரின் ஷிருய் விழா கடந்த 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்பாலில் இருந்து உக்ருல் மாவட்ட தலைநகருக்கு பல்வேறு குகி கிராமங்களை கடந்து 80 கி.மீ. செல்ல வேண்டும் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
20ஆம் தேதி பத்திரிகையாளர்களுடன் சென்ற மணிப்பூர் மாநில அரசு பேந்தில், மணிப்பூர் பெயர் மறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு மெய்தி சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். அத்துடன், டெல்லி சென்றுள்ள கவர்னர் இம்பால் திரும்பி ராஜ் பவனுக்கு செல்லும் வழியில் போராட்ட பேரணி நடத்தவும், சாலைகளின் இருபுறமும் மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் டெல்லிக்கு சென்ற ஆளுநர் அஜய் குமார் பல்லா இன்று இம்பால் திரும்பினார். அப்போது மெய்தி சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் போராட்ட பேரணி நடத்த இருந்தனர். அதை பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அத்துடன் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையத்தில் இருந்து ராஜ் பவன் சென்றார் ஆளுநர்.
பேருந்தில் மணிப்பூர் பெயரை மறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் "மணிப்பூர் அடையாளம் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல. மணிப்பூர் மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்" பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் மெய்தி மக்கள் ஈடுபட்டனர்.
- மெய்தி சமூகத்தினர் தொடர்பான விழா வருகிற 20ஆம் தொடங்குகிறது.
- குகி சமூகத்தினர் அதிகம் வாழும் கிராமங்களை கடந்து மெய்தி சமூகத்தினர் விழா நடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவ்டத்தில் 5ஆவது மாநில அளவிலான ஷிருய் லில்லி விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் மெய்தி சமூகத்தினர் கலந்து கொள்ளக் கூடாது என டெல்லி குகி மாணவர்கள் அமைப்பு தலைவர் பயோஜாகுப் கைதே மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அவருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். முடிந்தவரை அவரை உடனடியாக கைது செய்யும்படி அருகில் உள்ள மாநிலங்களான மிசோரம், அசாம், நாகாலந்து, மேகாலயா மாநிலங்களுக்கு மணிப்பூர் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஷிருய் விழாவில் மக்கள் கலந்து கொள்ள போதுமான பாதுகாப்பை நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்.
"மெய்தி தங்குல் சகோதரத்துவத்தை ஊக்குவிப்பதற்காக ஷிருய் விழாவை நடத்த உள்ளனர். விழாவிற்கு வரும் எந்த மெய்தியும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உயிருடன் வெளியேற அனுமதிக்கப்படக்கூடாது" என பயோஜாகுப் கைதே பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஷிருய் விழா வருகிற 20ஆம் தேதி முதல் 24ஆம் தேவை வரை நடைபெற இருக்கிறது. இம்பாலில் இருந்து உக்ருல் மாவட்ட தலைநகருக்கு பல்வேறு குகி கிராமங்களை கடந்து 80 கி.மீ. செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி- குகி சமூகத்தினருக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடங்கியது. இந்த வன்முறை இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இந்த வன்முறையில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சொந்த வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- மணிப்பூரில் மெய்தி- குதி பிரிவினருக்கு இடையில் 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி வன்முறை வெடித்தது.
- வன்முறை நடைபெற்று 2 வருடங்கள் நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில் போராட்டத்திற்கு வலியுறுத்தல்.
மணிப்பூரின் சில பகுதிகளில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களையும் மே 3ஆம் தேதி மூட வேண்டும் என்று இரண்டு குக்கி-சோமி மாணவர் அமைப்புகள் மக்களை வலியுறுத்தியுள்ளன.
இனக்கலவரம் வெடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், மே 3, 2025 அன்று சோமி மாணவர் கூட்டமைப்பு (ZSF) மற்றும் குக்கி மாணவர் அமைப்பு (KSO) ஆகியவை அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடி மௌனமாக நாளைக் கடைப்பிடிக்க" அனைவரையும் வலியுறுத்தியுள்ளன.
மேலும் "அனைவரின் வீடுகளிலும் கருப்புக்கொடிகளை ஏற்ற வேண்டும். தியாகிகளின் கல்லறையில் ஒரு கூட்டு பிரார்த்தனையும், சூரசந்த்பூர் மாவட்ட தலைமையகத்தில் உள்ள நினைவுச் சுவரில் ஒரு பொதுக் கூட்டமும் நடத்தப்படும்" என்றும், பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டன.
மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூகத்தினர் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். பெரும்பான்மை சமூகத்தினரான மெய்தி சமூகத்தினர் தங்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்ப தெரிவித்து 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி குகி சமூகத்தினர் மிகப்பெரிய பேரணியை நடத்தினர். பேரணியின்போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இனக் கலவரமாக மாறியது.
இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் முதலமைச்சர் என் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2027 வரை பதவிக்காலம் கொண்ட மாநில சட்டமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, பழங்குடியினத் தலைவர்கள் அமைப்பு (ITLF) மே 3 ஆம் தேதி "பிரிவினை தினமாக" அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. குகி-சோ சமூகங்களை ஆழமாகப் பாதித்த இன மோதலில் உயிரழந்தவர்களின் நினைவுக்கூரும் நாளாக இருக்கும் எனத் தெரிவிததுள்ளது.
இம்பால் பள்ளத்தாக்கை அடிப்படையான கொண்டு மெய்தி சமூக அமைப்பான COCOMI, மே 3ஆம் தேதி மக்கள் அனைவரும் அனைத்து பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு, குமான் லாம்பாக் மைதானத்தில் மாநிலத்தில் எதிர்காலம் குறித்த ஆலோசனை பொதுக்கூட்த்தில் கலந்து கொள்ள வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- 2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- மணிப்பூரில் மேய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.
மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைத்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம். இதன்படி மெய்தி இனத்தினர் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலேயே சேர்க்கப்படுவர்.
2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பிறகு மணிப்பூரில் மெய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மணிப்பூர் பழங்குடியினர் சங்கம் மறு ஆய்வு செய்தது. அவ்வழக்கின் தீர்ப்பில், தனது உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.
அத்தீர்ப்பில் பழங்குடியினர் பட்டியலில் மாற்றம் செய்யவும், திருத்தவும் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றம் சுட்டி காட்டியது.
- இன்று முதல் மக்கள் அனைத்து சாலைகளிலும் சுதந்திரமாக செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு.
- மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து பலத்த பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது.
மணிப்பூரில் கடந்த 2023-ஆண்டு குகி- மெய்தி ஆகிய இரண்டு பிரிவினருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் சொந்த இடங்களில் இருந்து வெளியேறினர். இந்த வன்முறைக்கு சுமார் 250 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வன்முறை காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் மாநில பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு வருகிற 8-ந்தேதி (இன்றுமுதல்) முதல் அனைத்து சாலைகளும் திறக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அனைத்து சாலைகளிலும் சுதந்திரமாக நடமாடுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 8-ந்தேதியான இன்று மணிப்பூர் மாநிலத்தில் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து தொடங்கியது.
சேனாபதி மாவட்டத்திற்குச் செல்லும் பேருந்து கக்போக்பி மாவட்டத்தின் காம்கிபாய் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது குகி போராட்டக்காரர்கள் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது வாகனத்திற்கு பாதுகாப்பாக சென்ற பாதுகாப்புப்படையினர் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசியதுடன் தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.
குகி பிரிவினர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தனி நிர்வாகம் வேண்டும். அதுவரை சுதந்திரமான நடமாட்டத்தை விரும்பவில்லை என போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு பேருந்து இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.






