search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiranga selfies"

    • அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தேசிய கொடியுடன் புகைப்படங்களை பகிர்ந்தனர்.
    • சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா உள்ளிட்டோரும் பங்கேற்பு.

    இந்தியா சுதந்திரத்தின் 76வது ஆண்டு தொடங்கும் நிலையில், இல்லந்தோறும் மூவர்ண கொடி ஏற்றும் ஹர் கர் திரங்கா இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.

    பிரபலங்கள், பொதுமக்கள் என நாட்டு மக்கள் மூவர்ண கொடியை வீடுகளில் ஏற்றி அது குறித்து புகைப்படத்தை பதிவிடுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து இல்லந்தோறும் மூவர்ணக்கொடி வலைதளத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக்கொடி செல்பி படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.


    அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா உள்பட திரையுலகம், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு தேசிய கொடியுடன் இருக்கும் புகைப்படங்களை இணை தளத்தில் பகிர்ந்துள்ளனர். 


    இந்த இயக்கத்தில் மாலை 4 மணி வரை 5 கோடி செல்பி படங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க தருணமாகும் என்று, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். கடமை உணர்வு கொண்ட இந்தியர்களுக்கு, நாடு முதலில் என்ற கூட்டு முயற்சியை இது பிரதிபலிப்பதாக அவர் கூறியுள்ளார். 


    75 ஆம் ஆண்டு சுதந்திர தின அமிர்தப் பெருவிழா என்னும் 75 வார கவுன்ட் டவுன் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டது. இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்துடன் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் அது முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×