search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tahsildar Reconciliation"

    • கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது.
    • நிலம் உள்ளவர்கள் அவர்களது நிலத்திலே அடக்கம் செய்து விடுகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி வட்டம் வேகாக்கொல்லை மதுரா பாவைக்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது தந்தை தந்தை வெள்ளக்கண்ணு நேற்று மதியம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இந்த கிராமத்தில் உடல் நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு செல்ல வழி இல்லாத காரணத்தினால் நல்லடக்கம் செய்வதில் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது பற்றி தகவல் வந்ததும் பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல், காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன்,துணை தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் பிரியா லதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபேச்சுவார்த்தை நடத்தினர்.

    விரைவில் மயானத்திற்கு செல்ல நிரந்தரமான பாதையை அமைத்து தரப்படும் எனஅதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து கைப்பாடை மூலமாகபட்டா நிலத்தின் வழியாக பிணத்தை தூக்கி சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் ஊரில் யாராவது இறந்தால் இது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது. நிலம் உள்ளவர்கள் அவர்களது நிலத்திலே அடக்கம் செய்துவிடு கின்றனர். நிலம், வீடு, வாசல் இல்லாதவர்கள் இறந்தால் அவர்களின் பாடு திண்டாட்டம் ஆகிறது. எனவே நிரந்தர தீர்வுக்கு அரசு உதவ வேண்டும் என்றனர். 

    ×