search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TEXTILE MERCHANTS"

    • திருச்சி விமான நிலைய பகுதியில் அமைந்துள்ள ஜவுளி வியாபாரிகள் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
    • ஏர்போர்ட் பகுதியில் கடந்த இரு தினங்களாக வீட்டின் பூட்டை உடைத்து கொள்ைளயில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டு மென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    திருச்சி:

    திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் நிகழ்வு அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் அன்பு நகர் பகுதியில் வசித்து வரும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணி புரியும் நிதிஷ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகையும் ஒரு கிலோ வெள்ளி நகைகளும் கொள்ளை போனது.

    இந்த நிலையில் நேற்று காலை அதே அன்பு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது.

    திருச்சி ஏர்போர்ட் அன்பில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தனது வீட்டை சென்னையைச் சேர்ந்த துணி வியாபாரிகளான கபீர் (வயது 30) மற்றும் மீரான் (32) ஆகிய இருவருக்கும் வாடகைக்கு விட்டிருந்தார்.

    இதற்கிடையே கபீர் மற்றும் மீரான் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது. மேற்கண்ட இருவரும் மொத்தமாக ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

    இவர்களிடம் பணிபுரிபவர்களாக சுமார் நான்கு முதல் ஐந்து நபர்கள் அடிக்கடி இந்த வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    சென்னை சென்றிருந்த இருவரும் திரும்பி வந்தபோது, அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. பின்னர் அவர்கள் இதுபற்றி உடனடியாக ஏர்போர்ட் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏர்போர்ட் போலீசார் சோதனை செய்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த துணிகள் சிதறி கிடப்பதை கண்டனர்.

    ஆனால் இந்த வீட்டில் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என தெரிய வந்தது. இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏர்போர்ட் பகுதியில் கடந்த இரு தினங்களாக வீட்டின் பூட்டை உடைத்து கொள்ைளயில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டு மென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×