search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Force Surveillance"

    • விழுப்புரம் அருகே 40 லிட்டர் சாராயம்- மதுபாட்டில்கள் போலீசால் அழிக்கப்பட்டது.
    • சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட–த்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, புகையிலை, கள்ளச் சாராயம் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை தடுப்ப–தற்காக தனிப்ப–டைகள் அமைத்து தீவிர–மாக கண்காணித்து வருகின்றனர். மேலும் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது போலீஸ் எஸ்.பி. ஸ்ரீநாதா எடுத்துள்ள  நடவடிக்கையால் விழுப்பு–ரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி–களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கள்ளச்சாராயம் உள்ளிட்டவை குறைந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அரகண்ட நல்லூர் அருகே வீரபாண்டி பகுதியில் சாராயம், மது பாட்டில் விற்பதாக எஸ்.பி. ஸ்ரீ நாதாவிற்கு கிடைத்த தகவலின் பேரில் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ய போலீசாருக்கு உத்தர விட்டார்.

    அதன்படி அறக்கண்ட நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது காமன் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவர் வீட்டில் 40 லிட்டர் சாராயம், 10 மது பாட்டில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் என்கிற கட்ட சுரேசை வலைவீசி தேடிவருகின்ற னர். மேலும் 40 லிட்டர் சாராயம் மற்றும் 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து அதை அளித்தனர். மேலும் இதுகுறித்து போலீ சார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    ×