search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Su ArunKumar"

    • படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
    • அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர்.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தை உலகம் முழுவதும் உள்ள சில திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் யோசனையில் உள்ளதால் அதன் வெளியீட்டு தேதி ஜனவரி 26-இல் இருந்து தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 'தங்கலான்' திரையரங்குகளில் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து விக்ரம் தனது 62-வது படத்துக்காக இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருடன் முதல் முறையாக இணைகிறார். இந்த படத்தை எச்.ஆர். பிக்சர் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர். இது குழந்தைகளின் பாதுகாப்பை உணர்வுபூர்வமாக சித்தரித்ததற்காக பாராட்டப்பட்ட படம்.

    விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் (2014) படத்தின் மூலம் அருண் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் சேதுபதி (2016), சிந்துபாத் (2019) என்று தொடர்ந்து மூன்று படங்கள் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண். தற்போது தனது ஐந்தாவது படமான 'சியான் 62' படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முன் தயாரிப்பு மற்றும் ஸ்கிரிப்ட் விவாதத்திற்காக விக்ரம் மற்றும் அருண் குமார் கோவா சென்றுள்ளனர்.

    அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016-ல் வெளியான சேதுபதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sethupathi2 #VijaySethupathi
    வெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 என சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை.

    அடுத்து சூர்யாவின் காக்க காக்க, பிரசன்னாவின் கண்ட நாள் முதல் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதுபோல் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்தும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆலோசித்து வருகிறார். அஜித்குமாரும், வெங்கட் பிரபுவும் இதுகுறித்து நேரிலும் சந்தித்து பேசி உள்ளனர்.



    இந்த நிலையில் கடந்த 2016-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அருண்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வருவார். இரண்டாம் பாகத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாகவே வருகிறார்.

    இதற்கிடையே அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சிந்துபாத் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெளியாகிய இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. #Sethupathi2 #VijaySethupathi #RamyaNambeesan #SuArunKumar

    ×