search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SRHvsLSG"

    • அன்மோல்பிரீத் சிங் 36, மார்க்ரம் 28, பிலிப்ஸ் 0 ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
    • நிக்கோலஸ் பூரான் 13 பந்துகளில் 44 ரன்களை எடுத்தார்.

    ஐதராபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 58-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டகாரர்களாக அபிஷேக் சர்மா, அன்மோல்பிரீத் சிங் ஆகியோர் களம் இறங்கினர்.

    அபிஷேக் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 20 ரன்களை குவித்தார். அடுத்து வந்த அன்மோல்பிரீத் சிங் 36, மார்க்ரம் 28, பிலிப்ஸ் 0 ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளாசன் 47 ரன்கள் குவித்தார். லக்னோ அணி சார்பில் குர்ணால் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 183 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.

     

    லக்னோ அணியின் துவக்க வீரர் கைல் மேயர்ஸ் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். குயிண்டன் டி காக் 19 பந்துகளில் 29 ரன்களை குவித்தார். அடுத்துவந்த பிரெராக் மண்கட் 45 பந்துகளில் 64 ரன்களை விளாசினார். இவர் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இவரைத் தொடர்நிது களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 25 பந்துகளில் 40 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் 13 பந்துகளில் 44 ரன்களை எடுத்தார். இதன் மூலம் 19.2 ஓவர்களிலேயே லக்னோ அணி 185 ரன்களை குவித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய பிரெராக் மன்கட் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    ×