search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rural Local Elections"

    • கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 2022-க்கான கால அட்டவணை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யத்தால் வெளியிடப் பட்டுள்ளது.அதன்படி தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 9 ந்தேதி நடைபெறவுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றி யங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் -01, ஊராட்சி மன்றத்தலைவர் -04, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்-26, ஆகிய 31 காலி பதவியிடங்களுக்கு தற்செயல் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2022-க்கான கால அட்டவணை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

    அதன்படி தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 9 ந்தேதி நடைபெறவுள்ளது. மேற்படி ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 04142-284562 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    ×