search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.78 thousand"

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
    • சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 654 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 654 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 26 ரூபாய் 76 காசுக்கும், அதிகபட்ச விலையாக 30 ரூபாய் 49 காசுக்கும், சராசரி விலையாக 27 ரூபாய் 15 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2 ஆயிரத்து 881 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.78 ஆயிரத்து 344-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    ×