search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rowdy Murdered"

    • கொலை செய்யப்படுவதற்கு முன்பு அஸ்வின் குமாரை அவரது கூட்டாளி அஜய் நேற்று மாலை அழைத்து சென்று உள்ளார்.
    • அஜய்யை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பொன்னேரி:

    சென்னையை அடுத்து உள்ள மீஞ்சூர் டி.எச். சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டது. இந்த வாலிபரின் கை மட்டும் தனியாக வெட்டப்பட்டு நடுரோட்டில் கிடந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள், வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அவர்கள் மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மீஞ்சூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    அந்த பிணத்தை போலீசார் கைப்பற்றியபோது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாலிபரின் உடல் மட்டுமே அங்கு கிடந்தது. தலை தனியாக துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தலையை காணவில்லை. மேலும் உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட கையும் அங்கு தனியாக கிடந்தது.

    அந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவருக்கு 25 வயது இருக்கும். அந்த வாலிபரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு ஆவடி போலீஸ் இணை கமிஷனர் பால கிருஷ்ணன், உதவி கமிஷனர் ராஜ ராபர்ட், இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரித்தனர்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அந்த வாலிபரை வேறு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு போர்வையால் சுற்றி எடுத்து வந்து மீஞ்சூர் டி.எச். சாலை, காந்தி ரோடு பகுதியில் நடுரோட்டில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.

    எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்த பகுதியில் வாலிபரின் தலை இல்லாத உடலை வீசி சென்றிருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த கொலையாளிகள் யார்? கொலை செய்யப்பட்டவரின் தலை எங்கே என்பதை கண்டுபிடிப்பதற்காக உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் உடனடியாக அதிரடி விசாரணையில் இறங்கினார்கள். இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது யார் என்பதை போலீசார் உடனடியாக கண்டு பிடித்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் பகுதியை சேர்ந்த அஸ்வின் குமார் என்பது தெரியவந்தது. இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது திருப்பாலைவனம் போலீசில் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகள் உள்ளன. கொலை செய்யப்பட்ட ரவுடி அஸ்வின் குமாருக்கு திருமணம் முடிந்து 3 மாதங்களே ஆகியுள்ளன. இது காதல் திருமணம் ஆகும்.

    இந்த நிலையில் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அஸ்வின் குமாரை அவரது கூட்டாளி அஜய் நேற்று மாலை அழைத்து சென்று உள்ளார். அதன் பிறகுதான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அஜய் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கொலை செய்யப்பட்ட அஸ்வின் குமாரின் தலை கண்டு பிடிக்கப்பட்டது. அவரது தலை சோழவரம் அருகே உள்ள பெருங்காவூர் காலனி சுடுகாட்டில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த தலையை போலீசார் கைப்பற்றினார்கள்.

    அஸ்வின் குமாரை கொலை செய்து அவரது தலை, கைகளை தனியாக வெட்டி எடுத்த பிறகு தலையை மட்டும் சுடுகாட்டில் வைத்து விட்டு சென்றுள்ளனர். உடல் மற்றும் கையை போர்வையால் சுற்றி மீஞ்சூர் டி.எச். சாலை காந்தி ரோடு பகுதியில் சாலையில் வீசி சென்றுள்ளனர்.

    இன்று அதிகாலையில் அந்த வழியாக வந்தவர்கள் ஏதோ வாகனத்தில் இருந்து காய்கறி மூட்டை விழுந்து இருக்கலாம் என்று நினைத்தனர். 3 பேர் அந்த மூட்டையை தூக்க சென்றனர். அப்போது துண்டிக்கப்பட்ட கை மட்டும் போர்வையில் இருந்து வெளியே வந்து தனியாக கிடந்தது. கை தனியாக கிடப்பதை பார்த்த பிறகு அவர்கள் பயந்து போய் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் பிறகு தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே அஸ்வின் குமாரை கடைசியாக வெளியே அழைத்து சென்ற அஜயை போலீசார் தேடினார்கள். ஆனால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அவர் பிடிபட்டால் தான் ரவுடி அஸ்வின் குமாரை கொலை செய்தவர்கள் யார்? அஸ்வின் குமார் கொலைக்கும், அவரது கூட்டாளி அஜய்க்கும் தொடர்பு உள்ளதா? அஸ்வின் குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை எங்கே வைத்து கொலை செய்தனர் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும். எனவே அஜய்யை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.

    இன்று அதிகாலை நேரத்தில் தலை, கை தனியாக துண்டிக்கப்பட்டு ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் மீஞ்சூர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கண்டமங்கலம் அருகே ரவுடி கொலையில் குற்றவாளிகளை பிடிக்க புதுவையில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர்.
    கண்டமங்கலம்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள பொறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 32). பிரபல ரவுடி.

    கடந்த 2014-ம் ஆண்டு புதுவை காங்கிரஸ் பிரமுகர் சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஜெகன் மீது வழக்கு உள்ளது. மேலும் இவர் மீது வில்லியனூர் போலீசில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    கடலூர் மாவட்டத்தில் நடந்த வழிப்பறி வழக்கில் ஜெகன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 9-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். பின்பு அவர் வில்லியனூர் பொறையூரில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு சென்றார்.

    நேற்று காலை அவர் வில்லியனூர் உளவாய்க்காலில் மீன் கடை நடத்தி வரும் ராஜேந்திரன் என்பவரின் கடைக்கு சென்றார். அவரிடம் பணம் கொடுக்காமல் மீன் கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜேந்திரனை, ஜெகன் தாக்கினார்.

    இது தொடர்பாக ராஜேந்திரன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். இதையறிந்த ஜெகன் ஆத்திரம் அடைந்தார். நேற்று மாலை ஜெகன், ராஜேந்திரனின் வீட்டுக்கு சென்று மீண்டும் தகராறு செய்தார்.

    இந்த விவரம் ராஜேந்திரனின் மகன் நவீன் (25) என்பவருக்கு தெரிய வந்தது. ஏற்கனவே நவீனுக்கும், ஜெகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. தனது தந்தையிடம் ஜெகன் மீண்டும் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்து அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

    இது தொடர்பாக தனது நண்பரிடம் கூறினார். இந்த நிலையில் நேற்று இரவு ஜெகன், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சின்ன அமணன்குப்பம் கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை பார்க்க சென்றார்.

    இந்த விவரம் அறிந்த நவீன், தனது நண்பருடன் அங்கு சென்றார். அங்குள்ள கோவில் முன்பு ஜெகன் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று மின்தடை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி நவீனும், அவரது நண்பரும் சரமாரியாக ஜெகனை வெட்டினர்.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜெகன் ஓடினார். ஆனால் அவர்கள் ஓட ஓட விரட்டி சென்று ஜெகனை வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெகன் பரிதாபமாக இறந்தார். இதையறிந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கண்ட மங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக நவீன் உள்பட 2 பேரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், கோபி, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    இதில் நவீன் உள்பட 2 பேர் புதுவையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையொட்டி தனிப்படை போலீசார் புதுவை விரைந்தனர். வில்லியனூர், உளவாய்க்கால் மற்றும் புதுவையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகளை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ரவடி ஜெகனுக்கு வசந்தி (28) என்ற மனைவியும், அரினி (11), சுந்தரி (8) என்ற 2 மகள்களும், அஸ்வின் (7) என்ற மகனும் உள்ளனர்.
    செங்குன்றம் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த நல்லூர், நாகாத்தம்மன் நகர், வி.பி.சிங் தெருவைச் சேர்ந்தவர் தாஸ் என்கிற அருள்தாஸ் (வயது27). ரவுடி.

    இவர் மீது ராஜமங்கலம், கொடுங்கையூர் போலீஸ் நிலையங்களில் 2 கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாஸ் பிரிந்து கடந்த ஒரு மாதமாக அதே பகுதி அம்பேத்கார் நகர் பெருமாள் அடிபாதம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார்.

    நேற்று இரவு தாஸ் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு தூங்கினார். நள்ளிரவு 12 மணியளவில் மர்ம வாலிபர் ஒருவர் தாஸ் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவரை பேசுவதற்காக வெளியே அழைத்து சென்றார்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த 5 பேர் கும்பல் தாசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். கை, கால், கழுத்தில் பலத்த காயம் அடைந்த தாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். உடனேகொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி. சக்கரவர்த்தி, டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. சமீபத்தில் தாஸ் யாருடனும் மோதலில் ஈடுபட்டாரா? என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் டேனி வரவழைக்கப்பட்டது. அது சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்று விட்டது. கொலை கும்பல் அங்கிருந்து வாகனத்தில் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    தாஸ் கொலை செய்யப்பட்ட இடம் அவரது வீட்டில் இருந்து சுமார் 10 மீட்டர் தூரம் ஆகும்.

    எனவே அவருக்கு நன்கு அறிமுகமான நபரே அழைத்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

    புழல் ஜெயிலில் ரவுடி பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து கைதிகள் 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    செங்குன்றம்:

    வியாசர்பாடி, சத்திய மூர்த்தி நகர், மல்லி தெருவை சேர்ந்தவர் முரளி என்கிற ‘பாக்சர்’ முரளி (வயது 36), பிரபல ரவுடியான இவர் மீது வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், கொடுங்கையூர், மாதவரம் போலீஸ் நிலையங்களில் 3 கொலை வழக்கு உள்ளிட்ட 16 வழக்குகள் உள்ளன.

    கடந்த மாதம் பாக்சர் முரளியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    ஏற்கனவே பாக்சர் முரளியின் எதிர்தரப்பான வியாசர்பாடி ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகள் சிலரும் பல்வேறு வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பாக்சர் முரளி சிறையில் உள்ள கழிவறைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட நாகேந்திரனின் கூட்டாளிகள் வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக், ஜோயல், சரண்ராஜ், பிரதீப், ரமேஷ் ஆகிய 5 பேர் அங்கு சென்றனர்.

    அவர்கள் பாக்சர் முரளியை உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் அலுமினிய தட்டை இரண்டாக உடைத்து அவரது கழுத்தை அறுத்தனர். மேலும் பிறப்பு உறுப்பையும் அறுத்து கொடூரமாக கொலை செய்தனர்.

    ஜெயிலுக்குள் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திட்டமிட்டு பாக்சர் முரளியை எதிர் கோஷ்டியினர் தீர்த்து கட்டி உள்ளனர்.

    இதையடுத்து கைதிகள் கார்த்திக், ஜோயல் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க புழல் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கடும் கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பில் உள்ள சிறையில் ரவுடிகளுக்கு இரும்பு கம்பி மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய தட்டு கிடைத்தது எப்படி? தாக்குதல் நடந்த போது சிறைக்காவலர்கள் அங்கு இல்லாதது ஏன்? சிறை அதிகாரிகள் யாரேனும் இந்த கொலைக்கு உதவினார்களா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

    அதிகாரிகளின் முழு விசாரணைக்கு பின்னரே ‘பாக்சர்’ முரளியின் கொடூர கொலைக்கு பின்னால் உள்ள மர்மங்கள் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரவுடி நாகேந்திரன் ஏற்கனவே கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது சிறுநீர் கோளாறால் அவதிப்பட்ட அவரை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். ஆஸ்பத்திரியில் இருந்து செல்லும்போது நாகேந்திரனை தீர்த்துக்கட்ட ‘பாக்சர்’ முரளி வெளியில் உள்ள தனது ஆட்களுடன் திட்டம் தீட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த நாகேந்திரன் சிறையில் உள்ள கூட்டாளிகள் மூலம் பாக்சர் முரளியை கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். அவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    ×