search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Gandhi foundation"

    • ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    • இந்த அறக்கட்டளை தலைவராக சோனியா காந்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.

    2020-ம் ஆண்டு ஜூன் மாதம் உள்துறை அமைச்சகத்தால் இந்தக் குழு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் எப்.சி.ஆர்.ஏ. உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. குழுவின் விசாரணை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தி, உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×