search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Postpaid"

    • உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது.
    • ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுபுது வசதிகளை செய்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

    2022 டிசம்பர் மாதம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது. எனவே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்றாலும் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தாலும், இந்த ஒரு பேக் இப்போது அனைத்து ரோமிங் தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

    அதன்படி வெளிநாடுகளில் அதிகம் தங்குபவர்கள் அல்லது அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கென சிறப்பு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பேக்குகள் மலிவு விலையில் சுமார் 1 வருடம் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உலகின் எந்த மூலையிலிருந்தும் வாடிக்கையாளருக்கு 24X7 கால் சென்டர் மூலம் வாடிக்கையாளர் சேவையை முற்றிலும் இலவசமாக பெறலாம் என்றும் தெரிவித்து அதை நடைமுறைபடுத்தி இருந்தது. இந்த மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்விக்கும் விதமாகவும், பயனுள்ளதாக இருந்தது.


    இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது.

    வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கைகாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குபதை தவிர்க்கும் வகையில் 'அனைத்து நாடுகளுக்கும் ஒரே பிளான்' என்ற பெயரில் 'புதிய சர்வதேச ரோமிங்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, 10 நாட்களுக்கு 1GB இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் கொண்ட இந்த புதிய திட்டம் 899 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கும். அதே போல் 30 நாட்களுக்கான கட்டணம் ரூபாய் 2998 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு சீரோ-டச் எனும் போஸ்ட்பெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு சீரோ-டச் எனும் புதிய போஸ்ட்பெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய சலுகையில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், இன்டர்நெட், சர்வதேச அழைப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய போஸ்ட்பெயிட் சலுகை விலை ரூ.199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 25 ஜிபி டேட்டா, சர்வதேச அழைப்புகள் நிமிடத்திற்கு 50 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகையில் மற்ற போஸ்ட்பெயிட் திட்டங்களை போன்று இல்லாமல், கட்டணத்தை எப்போது வேண்டுமானாலும் பார்த்து தெரிந்து கொள்ளும் வசதி மற்றும் மாத இறுதியில் கட்டண விவரத்தை இன்பாக்ஸ்-லும் பெற முடியும். புதிய சலுகையை பயன்படுத்துவோர் உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் சேவை சீராக கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது.



    ஒரு கிளிக் மூலம் சர்வதேச ரோமிங் சேவையை ஆக்டிவேட் செய்யும் வசதி கொண்ட ஜியோ சீரோ-டச் சலுகையில் கட்டணங்கள் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வாய்ஸ் கால் மேற்கொள்ள நிமிடத்திற்கு ரூ.2, ஒரு எம்பி டேட்டா ரூ.2, எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.2 என்றும் அன்லிமிட்டெட் சலுகைகள் நாள் ஒன்றுக்கு ரூ.500 (வரிகள் தவிர்த்து) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் எவ்வித முன்பணமும் செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், லண்டன், ஜெர்மனி, இலங்கை, மலேசியா, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, துருக்கி, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ஹங்கேரி, கிரீஸ், போர்ச்சுகல், ரோமானியா, செக் குடியரசு மற்றும் ஐயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    புதிய ஜியோ போஸ்ட்பெயிட் சலுகை மே 15-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
    ×