search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Polling center"

    • தென்காசி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டார்
    • கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 59 வாக்காளர்கள் உள்ளனர்

    கடையநல்லூர்:

    தமிழகம் முழுவதும் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து தென்காசி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டார். மேலும் இம்மாதம் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், தொகுதி மாற்றங்கள் குறித்து சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 768 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 43 ஆயிரத்து 279 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 59 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கடைய நல்லூர் நகராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆகாஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கிருந்த பணியாளர்களிடம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு குறைவாக உள்ளது. அதனை வரும் நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அந்த பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் தாசில்தார் சண்முகம், நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெகநாதன், குடும்பப் பொருள் தாசில்தார் சங்கரலிங்கம், மண்டல் துணை வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், தேர்தல் பிரிவு மாரியப்பன், கவுன்சிலர்கள் முருகன், முகையதீன் கனி, தி.மு.க. மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் மூவன்னா மசூது, உட்பட பலர் பங்கேற்றனர்.

    அதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலகங்களில் பொது மக்களின் மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொ ண்டார். பின்னர் இடைகால், ஆய்க்குடி, சாம்பவர் வடகரை பகுதி களில் அரசு புறம்போக்கு நிலங்களை பொதுமக்கள் ஆக்கிர மிப்பு செய்வதை தடுக்கும் வகையில் கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்படுவதை பார்வையிட்டார்.

    ×