search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NASA Scientists"

    செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் அமெரிக்காவில் இருந்து மனிதர்களை அனுப்ப உள்ளதாவும் அப்படி செல்லும் முதல் நபராக ஒரு பெண் இருப்பார் என்றும் நாசா அதிகாரி தெரிவித்தார். #NASA #Mars
    வாஷிங்டன்:

    செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்று கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆய்வு நடந்து வருகிறது.

    அமெரிக்காவின் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் முதலில் ஆய்வு நடத்தி வெற்றி கொடி நாட்ட வேண்டும் என்று தீவிரமாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

    அதன் ஒரு கட்டமாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை தரை இறக்கி ஆய்வு மேற்கொள்ள நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளுக்கு நாசா நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.

    இந்த நிலையில் நாசா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஜிம் பிரிடன்ஸ்டீன் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது செவ்வாய் கிரக திட்டம் பணிகள் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறுகையில், “செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் அமெரிக்காவில் இருந்து மனிதர்களை அனுப்ப உள்ளோம். அப்படி செல்லும் முதல் நபராக ஒரு பெண் இருப்பார்” என்று கூறினார்.

    இது தொடர்பான மற்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். இந்த மாத இறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பெண் விஞ்ஞானிகளை விண்ணில் நடக்க வைப்பதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.

    இந்த 2 பெண்களில் ஒருவர்தான் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NASA #Mars
    ×