search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LPG Price Hike"

    லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்போது விறகு அடுப்பை பயன்படுத்தும் கட்டாயத்தில் உள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை  மத்திய அரசு குறைந்தது. இதேபோல் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. அதன்படி பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. 

    இந்நிலையில், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளதை சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார்.

    பிரதமர் மோடி

    எரிவாயு விலை உயர்வு காரணமாக கிராமப்புறங்களில் 42 சதவீத மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு விறகு அடுப்புக்கு திரும்பியிருப்பதாக வெளியான செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

    ‘வளர்ச்சி என்ற சொல்லில் இருந்து பல மைல்கள் தொலைவில் உள்ளோம். லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்போது விறகு அடுப்பை பயன்படுத்தும் கட்டாயத்தில் உள்ளன. மோடியின் வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் உள்ளது. அதன் பிரேக்குகளும் செயலிழந்துவிட்டன’ என ராகுல் கூறி உள்ளார்.
    ×