என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Karachi Stampede"
- பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
- பொருளாதார நெருக்கடியால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பொருளாதார நெருக்கடியால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அந்தப் பொருட்களை வாங்க ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள் உள்பட பலர் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தனர். மயங்கி விழுந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி குழந்தைகள், பெண்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்த தொண்டு நிறுவன நிர்வாகிகளை கைது செய்தனர்.