search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jet airways flight"

    கடன் சுமையால் நொடிந்து, தள்ளாட்டம் போடும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலைக்கு கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விஜய் மல்லையா அனுதாபம் தெரிவித்துள்ளார். #JetAirways #VijayMallya
    லண்டன்:

    விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில்  பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

    இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.



    இதன் விளைவாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கிங் பிஷர் ஏர்லைன்சுக்கு நேரடி போட்டியாக இருந்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனமாகும். தற்போது கடன் சுமையால் இருக்கும் இந்நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயலுக்கு என் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன்களை இந்திய அரசு ரூ.35 ஆயிரம் கோடி கொடுத்து உதவிகரம் நீட்டியது. ஆனால் தனியார் விமான நிறுவனங்களுக்கு இவ்வாறு வஞ்சனை செய்கிறது. பொதுத்துறை வங்கிகளாக இருந்தாலும் எந்த பாகுபாடுமின்றி செயல்படதான் வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். #JetAirways #VijayMallya


    திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் ஏசி இயந்திரம் பழுதடைந்ததால் கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது. #JetAirways #FlightCancelled #TrichyAirport
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிங்கப்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 115 பயணிகள் அமர்ந்திருந்தனர். புறப்படும் சமயத்தில், விமானத்தின் ஏசி எந்திரம் பழுதடைந்திருப்பதை விமானி கண்டறிந்தார்.



    இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பயணம் ரத்து செய்யப்பட்டது.  பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். உரிய நேரத்தில் பழுது கண்டறியப்பட்டதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    இதேபோல் கடந்த மாதம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தினுள் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. கேபின் காற்றழுத்தம் குறைந்ததால் சுமார் 30 பயணிகளுக்கு மூக்கிலும் காதிலும் ரத்தம் வழிந்தது. இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்பி வந்து மும்பையில் தரையிறங்கியது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. #JetAirways #FlightCancelled #TrichyAirport

    விமானத்தில் காற்றழுத்தத்தால் அதிக ரத்த இழப்பை சந்தித்த பயணி தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.30 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என கூறியுள்ளார். #JetFlight #MumbaiAirport #JetFlight #MumbaiAirport
    மும்பை:

    மும்பையில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது.

    விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    விமானம் வானில் பறக்கும் போது, விமானத்துக்குள் காற்றழுத்தத்தை சீராக வைத்திருப்பதற்கு இரு பொத்தான்கள் உண்டு. அந்த பொத்தான்களை பைலட்டுகள் இயக்காமல் விட்டதே பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட காரணம் என்று தெரிய வந்தது.

    அடுத்த சில நிமிடங்களில் சுமார் 30 பயணிகளின் காது, மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர்களுக்கு விமான பணிப்பெண்கள் மாஸ்க் கொடுத்தனர். என்றாலும் பெரும்பாலான பயணிகள் தலைவலி, ரத்த கசிவால் கடுமையாக துடித்தனர்.

    இதையடுத்து அந்த விமானம் மீண்டும் மும்பை திரும்பி வந்தது. பயணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். ரத்தக் கசிவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அன்கூர் கலா, அன்வே ‌ஷன்ராய், முகேஷ் சர்மா, விகாஸ் அகர்வால், தாமோ தர்தாஸ் ஆகிய 5 பயணிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்துக்கு விமான பயணம் செய்யக் கூடாது என்று டாக்டர்கள் அவர்களிடம் அறிவுறுத்தி நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்தனர்.

    இந்த நிலையில் காது - மூக்கில் இருந்து அதிக ரத்த இழப்பை சந்தித்த பயணி கலா, ஜெட் ஏர்வேஸ் மீதும் அதன் ஊழியர்கள் மீதும் கடும் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்பட்ட பாதிப்புக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.



    இதையடுத்து அந்த விமானத்துக்குள் என்ன நடந்தது என்பது பற்றி விசாரிக்க ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மத்திய மந்திரி சுரேஷ்பிரபுவும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். #JetFlight #MumbaiAirport
    மும்பையில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கேபின் அழுத்தத்தால் பயணிகளின் மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வழிந்து உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #JetFlight #MumbaiAirport
    புதுடெல்லி:

    மும்பையில் இருந்து இன்று காலை ஜெய்ப்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 166 பயணிகளுடன் புறப்பட்டது. டேக் ஆப் ஆன சிறிது நேரத்திலேயே மீண்டும் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பயணிகள் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் திடீர் பரப்பரப்பு ஏற்பட்டது.

    விமானம் புறப்படும் போது, விமான கேபின் அழுத்தத்தை பராமரிக்கும் சுவிட்சை ஆன் செய்ய விமான சிப்பந்தி மறந்துவிட்டதால், அதிக அழுத்தம் காரணமாக 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காது மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வழிந்துள்ளது.  சில பயணிகளுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மும்பை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


    இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தினுள் உள்ள காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் விமானத்தை இயக்கியதே பயணிகளின் உடல் உபாதைகளுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JetFlight #MumbaiAirport
    ×