search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JEE Main Exam"

    • வருகிற 12-ந்தேதிக்குள் 7 லட்சம் பேர் விண்ணப்பம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    • தேர்வை எழுத இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஐ.ஐ.எஸ்.சி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடக்கிறது. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    இந்த தேர்வினை 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம். 2023-ம் ஆண்டுக்கான ஜே.இ.இ தேர்வு இம்மாதம் நடைபெற உள்ளது. இதற்காக வருகிற 12-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வை எழுத இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து பல மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். இதனால் வருகிற 12-ந்தேதிக்குள் 7 லட்சம் பேர் விண்ணப்பம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ஜனவரி மாதம் நடைபெறும் தேர்வினை ஏப்ரல் மாதத்திற்கும் ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்வினை மே மாதத்திற்கும் தள்ளி வைக்க வேண்டும் என பெரும்பாலான மாணவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி இந்த தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ×