search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HBDKamarajar"

    தமிழகம் முழுவதும் உள்ள பல பள்ளிக்கூடங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. #HBDKamarajar
    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தமிழகம் அரசின் சார்பில் இன்று காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சரோஜா, பெஞ்சமின், எம்.பி.க்கள் ஜெயவர்தன், விஜயகுமார், மற்றும் நடராஜ் எம்.எல்.ஏ., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    தமிழகம் முழுவதும் உள்ள பல பள்ளிக்கூடங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், மாணவ- மாணவிகளுடன் சேர்ந்து காமராஜர் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்கள்.

    மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    தியாகராயநகர் காமராஜர் இல்லத்தில் உள்ள சிலைக்கு தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



    அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் தங்கபாலு, செல்லகுமார், கராத்தே தியாகராஜன் ரங்கபாஷ்யம், சூளை ராஜேந்திரன், எஸ்.எம்.பாரூக், வக்கீல் நரேஷ்குமார், வியாசை கிருஷ்ணமூர்த்தி, வில்லிவாக்கம் ஜான்சன் உள்பட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் சித்ரா கிருஷ்ணன், மாம்பலம் ராஜேந்திரன், இசக்கிமுத்து, முத்துகுமார் ஆகியோர் காமராஜர் இல்லத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    காமராஜர் பிறந்த நாளையொட்டி நாசே தொண்டு நிறுவனம் சார்பில் ஆழ்வார் திருநகரில் இலவச தொழிற் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் நாசே.ராஜேஷ் தொடங்கி வைத்தார்.

    இந்த மையத்தில் தையல், கம்ப்யூட்டர், ஏ.சி. பழுது பார்த்தல், மெக்கானிக் உள்பட 8 விதமான தொழிற் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. 3 மாதங்கள் 600 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கொளத்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு மத்திய சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் ரங்க பாஷ்யம் மாலை அணிவித்தார். அவருடன் வேதகிரி, உதயகுமார், ரஞ்சன், ஏழுமலை, ராகுல், ஜெயா, லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் மணிக்கூண்டு அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. இந்த பேரணி சுழல் மெத்தையை அடைந்ததும் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. உ.பலராமன், ராஜேந்திரகுமார் ஜெயின், துரைராஜ், மாவட்ட பொருளாளர் டில்லிபாபு, சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை கடற்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்தார். அவருடன் ஞானதேசிகன், விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் எம்.பிரபாகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என். அசோகன், கொட்டிவாக்கம் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சேப்பாக்கம் தொகுதி த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா சிந்தாதிரிப்பேட்டையில் என்.ஆர்.டி.தயாளன் தலைமையில் நடந்தது. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.ரவிச்சந்திரன், த.மா.கா. கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

    இதில் வி.எம்.சரவணன், செந்தில்குமார், ரெக்ஸ் ஜெகன், வட்டார தலைவர்கள் சந்தானம், அழகுவேல், புகழேந்தி, மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் தொகுதி கிழக்கு பகுதி த.மா.கா. சார்பில் என்.பத்மநாபன் தலைமையில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஆர்.புனிதன் முன்னிலையில் தொகுதி அலுவலகத்தில் உள்ள காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், இனிப்புகளை மாநில பொதுச் செயலாளர் பி.ஜவஹர்பாபு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மத்திய செனனை கிழக்கு மாவட்ட தலைவர் என்.ரவிச்சந்திரன், வினோபாபு, அந்தோணி, ஓப்ளஸ், தாமோதரன், தேவசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தி.நகர் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

    இதில் மாநில துணை பொதுச்செயலாளர் எம்.ஏ. சேவியர், மாவட்ட செயலாளர்கள் எம்.ஏ.கிச்சா ரமேஷ், ஆர்.குணசேகரன், புரசை நாகப்பன், ஆர்.முருகேச பாண்டியன், ஏ.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.



    தி.நகர் காமராஜர் இல்லத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம்.ஏ. எம்.பாலாஜி, செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்திய சென்னை மேற்கு மாவட்ட இணை செயலாளர் அயன்புரம் மாரி, தென் சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பொன்.அருணாசலபாண்டியன், காஞ்சி மேற்கு மாவட்ட பொருளாளர் மாங்காடு முருகேசபாண்டி கலந்து கொண்டனர்.

    அகில இந்திய மனித உரிமைகள் கழக தொழிற் சங்க பேரவை நிறுவனத் தலைவர் டாக்டர் பி.முத்து ராமன் தலைமையில் மேட்டுக்குப்பம் லட்சுமி நகரில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

    செயல்தலைவர் ராஜேஷ், பொதுச் செயலாளர் சுரேஷ் பாபு, ஒருங்கிணைப்பாளர் முருகன், வழக்கறிஞர் அணி வடிவேல், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், அம்ரீத் ராஜ், சிவபாலன், முத்து கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்மென்ட் நிலத் தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன் தலைமையில் ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநில அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆலந்தூர் தெற்கு பகுதி ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பழவந்தாங்கல், பெரியார் தெருவில் உள்ள அணைக்கும் கரங்கள் இல்லத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் இலவச நோட்டு புத்தகத்தை தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன் வழங்கினார்.

    தி.நகர் பழனி, மாரி, வெங்கட்ராமன், ஞானசம்பந்தன், ராஜன், பிரபா, தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாலாஜி, இளம் சேகுவேரா, இரா.செல்வம், செல்லத்துரை ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    வணிகர் சங்க பேரமைப்பு திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கம் சார்பில் வி.பி.மணி, மற்றும் கராத்தே சந்துரு, சவுந்திரியா மாலை அணிவித்தனர்.

    தி.நகர் காமராஜர் இல்லத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு சென்னை நாடார் சங்க தலைவர் கரன்சிங் நாடார், விஜயகுமார் நாடார், மகேஷ் நாடார், மின்னல் ஸ்டீபன், ஹரிநாடார், முத்து ரமேஷ் மாலை அணிவித்தனர்.

    சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் த.ரவி, பொருளாளர் டி.ஜெய மணி, வடசென்னை மாவட்ட தலைவர் பி.கனியரசன், பொருளாளர் பி.ராம கிருஷ்ணன், தென்சென்னை தலைவர் ஆர்.எஸ்.ராம்ஜித், வைகோ கிருஷ்ணன், இளைஞர் அணி ஐவின், பாண்டிதினேஷ், ஆர். ஜெயக்குமார், எஸ். முத்துசாமி, என்.ராஜேஷ் கண்ணன், செய்தி தொடர்பாளர் எம்.பி.ரமேஷ், மத்திய சென்னை ஆர்.ராமச்சந்திரன், சேத்துப்பட்டு திருமலை செல்வம், எம்.மரிய சந்தோசம் கலந்து கொண்டனர்.

    அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பில் நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், கூடுதல் பொதுச் செயலாளர் மயிலை எம். மாரிதங்கம், டி.செல்வ குமார், கே.சி.ராஜா, ஜான் கிறிஸ்டோபர், பி.எம். மாரீஸ்வரன், ஒய்.இமானு வேல், ஆறுமுகவேல், குணசீலன், தங்கதுரை, எம்.மாட சாமி, எல்.கனகராஜ், ராம்ராஜ், ஜெனஸ், சேர்ம பாண்டி, பரமசிவம் நாடார் மாலை அணிவித்தனர்.

    புதிய நீதிக்கட்சி சார்பில் செயல் தலைவர் ஏ.ரவிக் குமார், ஆர்.டி.சேதுராமன், எஸ்.ஏ.ராஜாராமத், சுதர்சன், ராதாகிருஷ்ணன், ஆர். முரளி, ஆர்.எம்.ராமசாமி, மனோகரமூர்த்தி மாலை அணிவித்தனர்.

    காமராஜர் இல்லத்தில் காமராஜர் ஆதித்தனார் கழக பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.சிங் நாடார் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    காமராஜர் விட்டுச்சென்ற கல்வி கருவூலத்தை போற்றி பாதுகாக்க உறுதி ஏற்போம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.#HBDKamarajar #MKStalin

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கல்வி வளர்ச்சியின் இரு கண்களாக விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15 அன்று மாணவர் சமுதாயம் பெருமகிழ்ச்சியுடனும் பெருமிதத்தோடும் கொண்டாடிட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்க கடமைப்பட்டுள்ளேன். தமிழ்நாடு கல்வியில் முன்னேறவும், மாணவர் சமுதாயம் விழிப்புணர்வு பெற்று மேம்பாடடையவும் தன் வாழ்நாளில் அரும்பாடுபட்ட பெருந்தலைவர் அவர்களின் அரிய சேவையை தமிழ்ச் சமுதாயம் எந்நாளும் மறக்க முடியாது.

    கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் கட்டுவதில் புரட்சியை ஏற்படுத்திய கர்ம வீரரின் அருமை பெருமைகளை கல்விக்கண் பெற்ற ஒவ்வொருவரும் நினைத்துப் பெருமிதம் கொள்ள வேண்டிய நன்னாள் இந்த ஜூலை 15 ஆம் நாள்.

    அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை என்பதற்குச் சான்று காட்டும் அடையாளமாக விளங்கிய காமராஜர் அவர்களின் பிறந்த நாளை “கல்வி வளர்ச்சி நாளாக” அறிவித்து, அதைக் கொண்டாட அரசு ஆணை மட்டும் போடாமல் சட்டமாகவே இயற்றியவர் தலைவர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன்.


    அந்த கல்வி வளர்ச்சி நாளில் சத்துணவுடன் இரு முட்டை வழங்கிடும் திட்டத்தை அறிவித்து, முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கும் திட்டத்தையும் அமல்படுத்தி மாணவ-மாணவியர் உடல் நலத்துடன் பள்ளி சென்று கல்வி கற்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர் தலைவர் கலைஞர்.

    பெருந்தலைவர் காமராஜரின் கனவுகளை நனவாக்கும் வகையில் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாட புத்தகங்கள் வழங்குவது, இலவசக் கல்வி வழங்குவது, இலவச பஸ் பாஸ் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து, ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் கல்வி கிடைக்கப் பாடுபட்டது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

    பெருந்தலைவர் காமராஜர் திறந்து வைத்த அந்த கல்விக்கண் இன்று தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் நல்ல ஒளி வீசிக் கொண்டிருப்பது மட்டுமின்றி ஒப்பற்ற நிர்வாகத் திறன் படைத்த இளைஞர்களையும், நேர்மையாளர்களையும் உருவாக்க காரணமாக இருக்கிறது என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்துள்ள பரிசு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சாதனைத் தமிழர்கள் உருவாகக் காரணமாக இருந்த கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாளான இன்று அவர் விட்டுச் சென்ற “கல்வி” என்ற கருவூலத்தைப் போற்றிப் பாதுகாக்கும் செயலில் ஒவ்வொருவரும் ஈடுபடுவோம் என்று உறுதி மொழி எடுத்து, பெருந்தலைவரின் பிறந்த நாளை மாணவச் செல்வங்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ×