search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Chief Secretary"

    தலைமை செயலாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு டெல்லி பாட்டியாலா கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. #DelhiChiefSecretary #AAPMLAs #Kejriwal

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைமை செயலாளர் அன்சுபிரகாசை ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் தாக்கியதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் டெல்லி போலீசார் 300 பக்க குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்தனர்.

     


    தலைமை செயலாளர் தாக்கப்பட்டதற்கு முதல்- மந்திரி கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா மற்றும் 11 எம்.எல்.ஏ.க்களே இதற்கு பொறுப்பு என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு டெல்லி பாட்டியாலா கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. அக்டோபர் 25-ந்தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவால், சிசோடியா மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகப் படசமாக 7 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும். #DelhiChiefSecretary #AAPMLAs #Kejriwal

    ×