search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cricket Record"

    • 2021-ல் நெதர்லாந்தின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    • அர்ஜென்டினா வீராங்கனை பெரு அணிக்கெதிராக 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    இந்தோனேசியா- மங்கோலியா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி பாலியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தோனேசியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை நந்தா சகாரினி 61 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் மங்கோலியா 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் இந்தோனேசியாவிள் இளம் வீராங்களை ரொமாலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 24 ரன்னில் சுருண்டது. தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார் ரொமாலியா. மொத்தமாக 3.2 ஓவர்கள் வீசி ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் ஏழு விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இது அவருக்கு முதல் சர்வதேச போட்டியாகும்.

    இதற்கு முன்னதாக 2021-ல் நெதர்லாந்தின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஃப்ரெடெரிக் ஓவர்டிஜ் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியிருந்தது சாதனையாக இருந்தது. அர்ஜென்டினாவின் அலிசன் ஸ்டாக்ஸ் பெரு அணிக்கெதிராக 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    ×