search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chetan"

    தேவதர்ஷினி - சேத்தன் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சமீபத்தில் 96 படத்தில் அறிமுகமான அவர்களது மகள் நியதி தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த தடை விதித்திருக்கிறார்கள். #Chetan #Devadarshini
    தேவதர்ஷினி - சேத்தன் இருவருமே தம்பதிகளாகவே டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். அவர்கள் வழியில் மகள் நியதியும் 96 படம் மூலம் நடிகையாகி இருக்கிறார். தேவதர்ஷினியின் சிறுவயது வேடத்தில் நடித்தவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.

    தாம் தூம் படம் மூலம் அறிமுகமான சேத்தன் சமீபத்தில் வெளிவந்த தமிழ்படம் 2 படத்திலும் கலக்கி இருந்தார். களவு படத்திலும் நடித்திருந்தார். இதுபற்றி அவர் கூறும்போது ‘இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர். எனக்கு பாசிடிவ், நெகடிவ், காமெடி என எல்லா கேரக்டரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த வி‌ஷயத்தில் எனக்கு நாசர் சார் தான் முன்னோடி. நானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன். என் மனைவி தமிழ், தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகள் இப்போது 10 ஆம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.



    பிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோம். சினிமாவே குடும்பம். குடும்பமே சினிமா என்று இருக்கிறோம்.” என்கிற சேத்தன் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜா, சசிகுமாருடன் நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு பபங்கள் உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார். #Chetan #Devadarshini #Niyathi

    ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சேத்தன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். #AsianGames2018
    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா மற்றும் பாலெம் பேங் ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் தடகள போட்டிகள் இன்று தொடங்கியது. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியின் தகுதி சுற்று நடந்தது. ‘பி’ பிரிவில் இந்திய வீரர் சேத்தன் பாலசுப்பிரமணியா இடம் பெற்று இருந்தார். அவர் 2.15 மீட்டர் உயரம் தாண்டி 5-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    400 மீட்டர் ஓட்டத்தின் அரை இறுதிக்கு இந்திய வீரர்கள் முகமது அனஸ் மற்றும் ஆரோக்யராஜ் தகுதி பெற்றனர்.

    முகமது அனஸ்

    ‘தகுதி சுற்று 1’ ஓட்டத்தில் முகமது அனஸ் 45.63 வினாடியில் கடந்து முதல் இடத்தையும், ‘தகுதி சுற்று 4’ ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்யராஜ் 46.83 வினாடியில் கடந்து 2-வது இடத்தையும் பிடித்தனர். இதன்மூலம் இருவரும் அரை இறுதிக்கு முன்னேறினர்.

    கைப்பந்து போட்டியின் ஆண்கள் பிரிவில் இந்தியா 25-12, 25-21, 25-17 என்ற கணக்கில் மாலத்தீவை வீழ்த்தியது. #Asaingames2018
    ×