search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Crime Branch"

    • சீட்டு பணத்தை கொடுக்காமல் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இழுத்தடித்து வந்த முருகனும், நிர்மலாவும் தப்பி ஓடி தலைமறைவானார்கள்.
    • மத்திய குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    சென்னை:

    ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் எம்.ஜி.ரோடு பகுதியில் வசித்து வருபவர் முருகையன்.

    இவர் அந்த பகுதியில் வசித்து வந்த முருகன்- நிர்மலா தம்பதியிடம் சீட்டு போட்டிருந்தார். பட்டாபிராம் காமராஜர் தெருவில் 20 ஆண்டுகளாக வசித்து வந்த இருவரிடமும் அப்பகுதியை சேர்ந்த மக்களும் சீட்டு கட்டி வந்தனர்.

    முருகையன் தனது பெயரிலும் மகன் பெயரிலும் இரண்டு 5 லட்சம் சீட்டை கட்டி வந்தார். சீட்டு முடிந்த பிறகும் சீட்டு பணத்தை கொடுக்காமல் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இழுத்தடித்து வந்த முருகனும், நிர்மலாவும் பின்னர் தப்பி ஓடி தலைமறைவானார்கள். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் மனு நிலுவையில் இருந்து வந்தது.

    இந்நிலையில் சீட்டு மோசடி தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மத்திய குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவரும் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பேலீசார் பெங்களூர் பீமா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த முருகன்- நிர்மலா தம்பதியை கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×