search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bouquet Decoration"

    • கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு விடுதியில் பூங்கொத்து அலங்கார பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
    • அலங்காரம் செய்யப்பட்ட மலர்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு விடுதியில் பூங்கொத்து அலங்கார பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் அலங்கார மலர்களை கொண்டு பூங்கொத்துக்கள், மேசைமீது வைக்கும் அலங்கார மலர்கள், சுவற்றில்அலங்கரிக்கும் முறைகளுக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

    நெல்லையில் இருந்து வந்திருந்த பயிற்சியாளர்கள் அலங்காரம் செய்வது குறித்து எடுத்துரைத்தனர். மலர் அலங்காரத்தில்ஆர்வமுள்ள பயணிகளுக்கு, பூங்கொத்து தயாரிப்பதற்கான பயிற்சிகளை எடுத்து விளக்கங்கள் அளித்தனர்.

    இந்த பயிற்சி வகுப்புகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது.அலங்காரம் செய்யப்பட்ட மலர்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

    ×