search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Autonomous Vehicle"

    • சீனாவின் தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனம் பைடு தனது புது தானியங்கி வாகனத்தை அறிமுகம் செய்தது.
    • இந்த கார் ரோபோ -டாக்சி சேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

    சீன தேடுப்பொறி சேவை நிறுவனமான பைடு புதிய தானியங்கி வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வாகனத்தின் ஸ்டீரிங் வீலை கழற்றி விடும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு வாக்கில் சீனாவில் இந்த வாகனம் ரோபோ-டாக்சி சேவையை வழங்க பயன்படுத்தப்பட இருக்கிறது.


    புதிய தானியங்கி வாகனத்தின் விலை 2 லட்சத்து 50 ஆயிரம் யுவான்கள் வரை இருக்கும் என பைடு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதே வாகனத்தின் முந்தைய தலைமுறை மாடலின் விலை 4 லட்சத்து 80 ஆயிரம் யுவான்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


    "பெருமளவு விலை குறைப்பின் மூலம் சீனா முழுக்க தானியங்கி வாகனங்கள் எண்ணிக்கையை எங்களால் அதிகப்படுத்த முடியும். நாங்கள் எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம். ரோபோ-டாக்சியில் பயணம் செய்யும் போது தற்போதைய டாக்சிக்காக கொடுக்கும் பணத்தில் பாதியை மட்டுமே கொடுத்தால் போதும்," என பைடு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபின் லி தெரிவித்து உள்ளார்.

    புதிய வாகனத்தில் ஆட்டோனோமஸ் லெவல் 4 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மனித தலையீடு இன்றி காரை முழுமையாக இயக்கும். இந்த காரில் மொத்தம் எட்டு லிடார்களும், 12 கேமராக்களும் உள்ளன. லிடார்கள் டிடெக்‌ஷன் சிஸ்டம்கள் ஆகும். இவை ரேடார்களுக்கு இணையான சேவையை வழங்கும். இந்த வாகனத்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் பற்றி பைடு எந்த தகவலையும் வழங்கவில்லை.

    ×