search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Association President Information"

    • ஒவ்வொரு ஊராட்சியிலும் 5,000 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பெரும்பாலான ஊராட்சிகளில் மக்கள் பணியாளர், புதிய பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    மக்கள் நலப்பணியாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு, வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சியில் வசிக்க வேண்டும். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த 50 வயதுக்கு உட்பட்ட, கம்ப்யூட்டர் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள புத்தக காப்பாளர், சமுதாய வல்லுனர், மக்கள் நலப்பணியாளர் ஆகியோருக்கு இப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு ஊராட்சியிலும் 5,000 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    மக்கள் நலப்பணியாளராக பணியாற்றியவர், பணி ஒருங்கிணைப்பாளராக விண்ணப்பிக்கும் போது 'முந்தைய மக்கள் நலப்பணியாளர் பணிக்கான, பணிக்கால உரிமை மற்றும் முந்தைய பணிக்கால உரிமை தொகை ஏதும் கோரமாட்டேன் என்ற சம்மத கடிதம் பெற்ற பிறகு பணியில் அமர்த்த பி.டி.ஓ.,க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பழைய மக்கள் நலப்பணியாளர் விவரம் நிபந்தனைக்கு உட்பட்டு தற்போது பணியில் ஈடுபடுவது, சம்மத கடிதம் அளிப்பது போன்ற பணிகளை கவனிக்க, ஒன்றியம் தோறும் உதவி இயக்குனர் நிலையில் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, பெரும்பாலான ஊராட்சிகளில் மக்கள் பணியாளர், புதிய பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே6,000 ரூபாய் மாத சம்பளத்தில் பணியாற்றினோம்.மக்கள் நல பணியாளருக்கு மட்டும் 7,500 ரூபாய் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். புதிய பணியில் சேரவே விரும்புகிறோம். பணியில் இணைந்த போது தேவையான கோரிக்கையை முதல்வரிடம் முன்வைப்போம் என்றார்.

    ×