search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ANGELINA Jolie"

    • ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் 2016-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
    • உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    ஹாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.

    ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

    இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட்டின் 18 வயது மகள் ஷிலோ நோவல் ஜோலி பிட் தற்போது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் தனது பெயருடன் இணைந்து இருக்கும் தந்தையின் பிட் பெயரை நீக்கி விட்டு ஷிலோ நோவல் ஜோலி என்று சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இதுபோல் ஷிலோ நோவலோடு உடன் பிறந்தவர்களும் பிட் பெயரை தங்கள் பெயருடன் இணைத்து பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள்.

    பிராட் பிட் தன்னையும், தனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தினார் என்று ஏஞ்சலினா ஜோலி ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். இதனை பிராட் பிட் மறுத்தார். தற்போது அவரது குழந்தைகள் பிட் பெயரை நீக்கியதன் மூலம் அவர் துன்புறுத்தியது உண்மையாக இருக்குமோ என்று பலரும் பேசி வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட் ஜோடி 2016-ம் ஆண்டில் பிரிந்த நிலையில், விவாகரத்து விரைந்து வழங்க வேண்டும் என ஜோலி நீதிமன்றத்தில் கெஞ்சியுள்ளார். #BradPtt #AngelinaJolie
    நியூயார்க்:

    உலகின் மிக அழகான பெண்களின் ஒருவராக வர்ணிக்கப்படும் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கும் (43) அவரது  கணவர் பிராட் பிட்டுக்கும் (54) கருத்து வேறுபாடுகள் தலைதூக்கியதால் கடந்த 2016-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

    ஏஞ்சலினா-பிராட் பிட் தம்பதிக்கு பெற்ற  குழந்தைகள் 3 பேரும், வளர்ப்பு குழந்தைகள் மூன்று பேரும் உள்ள நிலையில், 
    விவாகரத்து கோரி ஏஞ்சலினா ஜோலி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, குழந்தைகளை பராமரிக்க பிராட் பிட் அர்த்தமுள்ள எந்த உதவியும் செய்யவில்லை என ஜோலி நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதனால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என ஜோலி நீதிபதியிடம் கெஞ்சி கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

    ஏஞ்சலினாவும் ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டும் கடந்த 2004ம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் 2014ம் ஆண்டு  முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். 

    ஜானி லீ மில்லர் மற்றும் பில்லி பாப் தோன்டான் ஆகியோரை விவாகரத்து செய்த  பின் ஏஞ்சலினா, பிட்டை திருமணம் செய்தார். அதேபோல் பிட்டுக்கு இது இரண்டாவது திருமணம். அவர் முதல் மனைவி  ஜெனிபரை விவாகரத்து செய்துவிட்டு ஏஞ்சலினாவை திருமணம் செய்தார். 
    ×