search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 killed"

    கோவை சுந்தராபுரத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalanisamy #ADMK
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை மதுக்கரை வட்டம், சுந்தராபுரத்தில் கடந்த 1-ந்தேதி பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி வந்துகொண்டிருந்த கார், சுந்தராபுரம் நான்கு வழிச்சாலையில் நிலைதடுமாறி சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

    இதில், ஆட்டோவில் பயணம் செய்த 3 பயணிகள் மற்றும் சாலையோரம் நின்றிருந்த கல்லூரி மாணவிகள் உள்பட 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



    இந்த விபத்தில் காயமடைந்த 3 நபர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடுதிரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #EdappadiPalanisamy #ADMK
    கனடாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மாண்ட்ரியல் நகரில் 6 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HeatWave
    டொரண்டோ:

    கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

    அப்பகுதி மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். காட்டுத் தீயும் அங்கு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

    மத்திய கனடாவில் அமைந்துள்ள மாண்ட்ரியல் நகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலுக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.

    தேவையில்லாமல் யாரும் வெளியில் வரவேண்டாம். மேலும், வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி  அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். #HeatWave
    ×