search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3000 Corona Vaccine Camp"

    • கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருவதால் தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் 3000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 7-ந் தேதி வரை 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி 18,46,332 நபர்களுக்கும், 2வது தவணை தடுப்பூசி 16,56,325 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 29,544 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை செலுத்தப்பட்டுள்ளது.

    மேலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களில் இதுவரை 81,712 சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி மற்றும் 64,300 சிறார்களுக்கு 2ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களில் இதுவரை 62,542 சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி மற்றும் 41,037 சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    எனினும் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 3 லட்சம் நபர்கள் 2ம் தவணை செலுத்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 17,000 சிறார்கள் மற்றும் 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட 21,000 சிறார்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

    மேலும் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 18,000 சிறார்கள் மற்றும் 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட 1000 சிறார்கள் முதல் தவணை செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

    கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்காக நாளை மறு நாள் (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மறு நாள் 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

    இம்முகாமினை பயன்படுத்தி பொது–மக்கள் அனைவரும் தவறாமல் தங்களது தவணைக்குரிய தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய்த்தொற்றின் கடுமை–யான பாதிப்புகளில் இருந்து தங்களை பாது–காத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    ×