search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2G spectrum case"

    2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி எம்.பி. விடுதலை செய்யப்பட்டதையடுத்து எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்டு 2-ந்தேதிக்கு டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
    புதுடெல்லி:

    2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு விடுதலை செய்தது.

    இதை எதிர்த்து, சி.பி.ஐ.யும், மத்திய அமலாகத்துறையும் டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தன. இதில் சி.பி.ஐ. மனு நீதிபதி எஸ்.பி.கார்க் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “2ஜி அலைக்கற்றை முறைகேட்டால் மத்திய அரசுக்கு மிகப்பெரும் அளவில் இழப்பு ஏற்பட்டது. மேலும் இந்த ஊழல் நாட்டுக்கே தலைகுனிவாகவும் அமைந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் தாங்கள் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டுள்ளனர். எனவே இதை அனுமதிக்க கூடாது” என்று வாதிட்டார்.

    இதையடுத்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்டு 2-ந்தேதிக்கும், அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஆகஸ்டு 6-ந்தேதிக்கும் நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.
    ×