search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1750 kg of ration rice"

    • ரேசன் அரிசி கடத்தப்படுவது தொடர்பாக பறக்கும் படைகுழு தேனி மாவட்டத்திலுள்ள எல்லை கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகியபகுதிகளில் திவீர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 1750 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கம்பம்:

    ரேசன் அரிசி கடத்தப்படுவது தொடர்பாக மாவட்ட வருவாய அலுவலர் சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தேனி மாவட்டத்திலுள்ள எல்லை கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகியபகுதிகளில் திவீர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதனடிப்படையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்பாதுகாப்புத்துறையின் பறக்கும் படை அலுவலர் (துணை வட்டாட்சியர்) முத்துக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் தாமைரைச்செல்வன் ஆகியோர் தலைமையிலான குழு உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட கம்பம் மெட்டு பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.

    அப்பொபோது கேரள பதிவு எண் கொண்ட ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் சுமார் 1750 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி மூடைகள் கேரளாவிற்கு கொண்டு செல்லும் போது கம்பம் மெட்டு அடிவாரத்தில் கைப்பற்றப்பட்டது.

    ரேசன் அரிசியை உத்தம்பாளையம் தமிழ்நாடு வாணிபக் கழக கிட்டங்கியில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் வாகனத்தை உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு குற்றவியல் புலனாய்வு மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவை எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×