என் மலர்
நீங்கள் தேடியது "போதைப்பொருள்"
- பள்ளிக் குழந்தைகள் இப்படி போதையில் மூழ்கித் தடம் புரள்வதைக் கண்டும் காணாமல் கடந்து போவது அலட்சியத்தின் உச்சம்.
- இப்படிப்பட்ட ஒரு சுயநல ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடும்!
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை வியாசர்பாடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற சம்பவம் இந்த போதை மாடல் அரசின் அவல ஆட்சிக்கான உதாரணம். பள்ளி மாணவர்கள் கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக் கத்தியும் புழங்கும் நிலையில், "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று விளம்பர விழா எடுக்க தி.மு.க. அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
"அப்பா" என்ற அடைமொழிக்கு ஆசைப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது கண்முன்னே பள்ளிக் குழந்தைகள் இப்படி போதையில் மூழ்கித் தடம் புரள்வதைக் கண்டும் காணாமல் கடந்து போவது அலட்சியத்தின் உச்சம். "அரசுப்பள்ளி எனது கோட்டை" என்று முழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப்பள்ளிகளில் இத்தனை அக்கிரமங்கள் நடக்கையில் எங்கே போனார் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
பதின்ம வயது பள்ளி மாணவனுக்கு கூட கஞ்சா விற்கப்படுகிறது என்றால் திமுகவின் ஏவல்துறை எந்தளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும்? தங்களின் அவல ஆட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீதும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடுபவர்கள் மீதும் பொய் வழக்கு போடுவதில் மட்டுமே திமுக அரசு அதீத கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், நமது சமூகக் கட்டமைப்பை அரித்துக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களை எப்படி ஒழிக்க முடியும்? இப்படிப்பட்ட ஒரு சுயநல ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடும்! என்று கூறியுள்ளார்.
- அவர்களிடமிருந்து 14 கிலோ ஹெராயின் மற்றும் 8 கிலோ மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன.
- ர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
குவைத் நீதிமன்றம் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க குவைத் உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைஃபான் மற்றும் ஷுவாய்க் பகுதிகளில் கண்காணிப்பு நடத்தி இரண்டு இந்தியர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 14 கிலோ ஹெராயின் மற்றும் 8 கிலோ மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித், அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
- கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மருத்துவ மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த மருத்துவ மாணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டாக்டர் விக்னேஷ் தாதன், பிடிஎஸ் மாணவர் ஹலீனா, அசிம், அவினாஷ், அஜித், அன்சியா மற்றும் ஹரிஷ் என்பது தெரிய வந்துள்ளது.
அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித் மற்றும் அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சோதனையின்போது, சுமார் 4 கிராம் எம்.டி.எம்.ஏ, 1 கிராம் ஹைப்ரிட் கஞ்சா மற்றும் 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 கார்கள், 2 பைக்குகள் மற்றும் 10 போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
- இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.
- புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
திருத்தணி ரெயில் நிலையம் அருகே வடமாநில வாலிபரை கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் அரிவளால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை 'ரீல்ஸ்' என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.
இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என கூறினார்.
- நான் வசிக்கும் பகுதி, போதைப்பொருளுக்கு அடிமையான குற்றவாளிகளால் மிக அபாயகரமானதாக இருக்கிறது.
- எனது ஸ்டுடியோ பகுதியில் உள்ள பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர் நண்பர்கள், சமீபத்தில் பல முறை தாக்கப்பட்டனர்.
திருத்தணி ரெயில் நிலையம் அருகே வடமாநில வாலிபரை கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் அரிவளால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோகாட்சி வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிக அளவில் இருப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தான் வசிக்கும் பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளாக மிக அபாயகரமானதாக இருக்கிறது என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. சென்னையில் நான் வசிக்கும் பகுதி, போதைப்பொருளுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மிக அபாயகரமானதாக இருக்கிறது
எனது ஸ்டுடியோ பகுதியில் உள்ள பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர் நண்பர்கள், சமீபத்தில் பல முறை தாக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்காரர்களில் பெரும்பாலானோர் இனவெறியர்களாக இருப்பதற்கு பெருமைப்படுகிறார்கள். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை ஒட்டுமொத்தமாக வெறுத்துத் தாக்குகிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக பல உள்ளூர் அரசியல் இத்தகையவர்களுக்கு ஆதரவாக பல உள்ளூர் அரசியல்குழுக்களும், சாதி அடிப்படையிலான அமைப்புகளும் ஓடி வருகின்றன.
இதை ஏற்றுக்கொண்டு உண்மை நிலையை புரிந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியாதா? நான் உட்பட அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது என சந்தோஷ் நாராயணன் கூறினார்.
- வெனிசுலாவை சுற்றி கடலில் அமெரிக்கா தனது படைகளை குவித்து உள்ளது.
- ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர்.
அமெரிக்கா-வெனிசுலா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
இதையடுத்து போதை பொருள் கடத்துவதாக கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் வெனிசுலாவை சுற்றி கடலில் அமெரிக்கா தனது படைகளை குவித்து உள்ளது.
இந்த நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணை கப்பலை அமெரிக்க ராணுவம் கைப்பற்றி உள்ளது. அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர்.
பின்னர் அந்த கப்பலை கைப்பற்றி தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த எண்ணை கப்பல், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் வகையில் சட்டவிரோத செயல்பட்டதால் தடை செய்யப்பட் டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்தது.
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் கூறும்போது, வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணை கப்பலை கைப்பற்றியுள்ளோம். இந்த கப்பல் இதுவரை கைப்பற்றப் பட்டவற்றில் மிகப்பெரியது. இது ஒரு மிக நல்ல காரணத்திற்காக கைப்பற்றப்பட்டது என்றார். கப்பல் கைப்பற்றப்பட்ட தற்கு வெனிசுலா அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
- சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சென்னை மாநகர போலீசார் போதை பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை.
சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் நடவடிக்கையால் வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களோடு தொடர்பில் இருந்த சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, இதுவரை போதைப்பொருள் வழக்குகளில் 29 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மாநகர போலீசார் போதை பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாமராஜ்பேட்டை தபால் நிலையத்தில் பார்சலில் வந்த 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்
புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் மூன்று வெவ்வேறு சோதனைகளின்போது ரூ.28.8 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், சம்பிகேஹள்ளி பகுதியில் பெங்களூரு நகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான்சானிய நாட்டை சேர்ந்த 29 வயதான நான்சி ஓமரியை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 9 கிலோ டையாக்ஸிமெத்தபெட்டமனையும் பறிமுதல் செய்தனர். இவை ரூ.18.5 கோடி மதிப்பு கொண்டவை எனவும் தெரிவித்தனர்.
2023 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் டெல்லி வந்த நான்சி, பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து பியூட்டிசியனாக பணிபுரிந்துகொண்டே, போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவின் சித்தபுராவில் நடந்த மற்றொரு நடவடிக்கையில், 28 வயதான நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் அரின்சே என்பவர் கைது செய்யப்பட்டார். 2021 ஆம் ஆண்டு வணிக விசா மூலம் இந்தியா வந்த அரின்சே 2022 ஆம் ஆண்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்.
டெல்லி, கோவா மற்றும் பிற வெளிநாட்டு வியாபாரிகளிடமிருந்து MDMA-வை வாங்கி விநியோகம் செய்துவந்துள்ளார். இவர் முன்னரே போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கோவிந்தபுரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜாமினில் வெளிவந்த நிலையில் மீண்டும் கைதாகியுள்ளார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சி.சி.பி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த பார்சலை அனுப்பியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்த ஆபரேஷனில் 2,500 காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
- இந்த நடவடிக்கையில் 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் "ரெட் கமாண்ட்" என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக காவல்துறை நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அதிரடி ஆபரேஷன் மேற்கொண்டது.
ரியோ டி ஜெனிரோ நகரில் கோம்ப்லெக்ஸோ டி அலேமாவோ மற்றும் பென்ஹா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த ஆபரேஷனில் 2,500 காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. மேலும் கும்பல் மீது ஹெலிக்கப்பட்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு ஆபரேஷனில் நான்கு காவல்துறையினர் உட்பட 119 பேர் உயிரிழநதனர் என அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 93 துப்பாக்கிகள் மற்றும் 500 கிலோவுக்கும் கூடுதலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதற்கிடையே இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளன.

இந்தத் ஆபரேஷன், அடுத்த வாரம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் சி40 சர்வதேச மேயர்கள் மாநாடு மற்றும் ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறார் என்று குற்றம்சாட்டினார்.
- அவர் ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என்றும் அவர் போதை பொருளை தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்குள் போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கொலம்பியா மீது டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறார் என்று குற்றம்சாட்டிய டிரம்ப், அவர் ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என்றும் அவர் போதை பொருளை தடுக்கவில்லை என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அதிபர் பெட்ரோ இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.
அண்மையில் மத்திய கரீபியன் கடலில் போதைப்பொருள் ஏற்றிச் செல்வதாக சந்தேகப்படும் கப்பல்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களை அதிபர் பெட்ரோ விமர்சித்தார்.
இந்த நிலையில் உலகளாவிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறி கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.
மேலும் அவரது மனைவி வெரோனிகா கார்சியா,மகன் நிக்கோலஸ் பெர்னாண்டோ பெட்ரோ பர்கோஸ் மற்றும் கொலம்பிய உள்துறை அமைச்சர் அர்மாண்டோ ஆல்பர்டோ பெனடெட்டி ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவில் உள்ள அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும். மேலும் அமெரிக்கர்களுடன் அவர்கள் வர்த்தகம் செய்ய முடியாது.
அதிபர் பெட்ரோவின் அமெரிக்க விசா கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கும்பலை பிடிக்க மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
- துபாயை சேர்ந்த முகமது சலீம் ஷேக் என்பவர் சிக்கினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மெபெட்ரோன் எனப்படும் போதைப்பொருட்கள் தயாரித்து சட்டவிரோதமாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தது. இந்த போதைப்பொருள் கடத்தலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் சிலரும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை குர்லா பகுதியில் பர்வீன் ஷேக் என்பவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துபாயை தளமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய அளவிலான சர்வதேச போதைக்கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருந்தது அம்பலமானது.
இந்த கும்பலை பிடிக்க மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதில் துபாயை சேர்ந்த முகமது சலீம் ஷேக் என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ. 256 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முகமது சலீம் ஷேக் தாவூத் இப்ராகிம் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலாவின் வலது கரமாக செயல்பட்டவர்.
சலீம் டோலா துபாயில் இருந்து கொண்டு சர்வதேச அளவில் போதைப்பொருட்கள் தயாரித்து வினியோகம் செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இது வரை ஒரு பெண் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- 5 படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 27 பேர் கொல்லப்பட்டனர்.
- இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத் தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இதில் கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்திய வெனிசுலா நாட்டு படகுகள் மீது அமெரிக்கா ராணுவம் தாக்குதல் நடத்தியது. 5 படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 27 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்காவை நோக்கி போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பல் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தும் நீர்மூழ்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்தக் கப்பலில் பெரும்பாலும் பென்டானைல் மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொ ருட்கள் நிறைந்திருந்ததாக அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியது.
மேலும் அதில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் இருந்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். மற்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்குத் தொடரப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளான ஈக்வடார் ,கொலம்பியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் கரைக்கு வந்திருந்தால் அதில் உள்ள போதைப் பொருள் மூலம் சுமார் 25 ஆயிரம் அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள்.
இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனது கண்காணிப் பின் கீழ் நிலம் அல்லது கடல் வழியாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தும் பயங்கரவாதிகளை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார்.






