என் மலர்

  நீங்கள் தேடியது "கிரிக்கெட்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை அணியில் அபாரமாக ஆடிய சூரியபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் குவித்தனர்.
  • பரபரப்பான கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் எடுத்து சமன் செய்தது.

  நெல்லை:

  ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நெல்லை சங்கர் நகரில் நடைபெற்றது. இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதின.

  முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய சூரியபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் குவித்தனர்.

  இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில், கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஜெகதீசன் 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ராதாகிருஷ்ணன் ஒரு ரன்னிலும், சசிதேவ் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

  அவர்களைத் தொடர்ந்து கவுசிக்குடன் இணைந்த சோனு யாதவ் அதிரடியாக ஆடினார். அவர் 23 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். சதீஷ் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் கவுசிக் அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி 2 சிக்சருடன் இந்த இலக்கை எட்டினார்.

  பரபரப்பான கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஹரிஷ் ரன் எடுக்கவில்லை. 2வது பந்தில் பவுண்டரி, 3வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 4வது பந்தில் சிக்சர், கடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் எடுத்து சமன் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

  முதலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்தது. அதிசயராஜ் வீசிய அந்த ஓவரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 ரன் சேர்த்தது. இதையடுத்து சூப்பர் ஓவரை எதிர்கொண்ட நெல்லை அணி, 10 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • துவக்க வீரர் சூரியபிரகாஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
  • அதிரடியாக ஆடிய சஞ்சய் யாதவ் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார்.

  நெல்லை:

  ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

  முதல் நாளான இன்று நெல்லை சங்கர் நகரில் தொடக்க ஆட்டம் நடைபெறுகிறது. இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது.

  நெல்லை அணியின் ரஞ்சன் பால் (7), பாபா அபராஜித் (2), பாபா இந்திரஜித் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் துவக்க வீரர் சூரியபிரகாஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சஞ்சய் யாதவ் பவுண்டரி, சிக்சர் என அதிரடி காட்டினார். இருவரும் அரை சதம் கடக்க, அணியின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது.

  சூரியபிரகாஷ் 62 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து ஆடிய சஞ்சய் யாதவ் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் விளாசினார். அவர் 47 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த ரன்னை எட்டினார்.

  இதனால் நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அஷிதேஷ் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் சந்தீப் வாரியர், மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், ஹரீஷ் குமார் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

  இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 795 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய உத்தரகாண்ட் அணி 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
  • 92 ஆண்டு கால உலக சாதனையை பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முறியடித்துள்ளது.

  ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஒரு ஆட்டத்தில் மும்பை அணி, உத்தரகாண்டை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 647 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. சுவேத் பார்கர் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

  அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய உத்தரகாண்ட் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்து மீண்டும் 'டிக்ளேர்' செய்தது.

  இதையடுத்து 795 ரன்கள் என்ற மிக இமாலய இலக்குடன் உத்தரகாண்ட் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி இன்று 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

  அதுமட்டுமின்றி முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி (ரன்கள் அடிப்படையில்) என்ற உலக சாதனையை மும்பை அணி படைத்துள்ளது. 92 ஆண்டுகளுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து அணியை 685 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூ சவுத் வேல்ஸ் அணி வெற்றி பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முறியடித்துள்ளது.

  ரஞ்சி டிராபியை பொருத்தவர, 1953-54ல் பெங்கால் அணி ஒடிசாவை 540 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

  நடப்பு ரஞ்சி டிராபி தொடரில், மும்பை அணி அரையிறதியில் உத்தர பிரதேச அணியுடன் விளையாட உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டி.என்.பி.எல். முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
  • ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

  சென்னை:

  2022ம் ஆண்டுக்கான டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

  கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக ரசிகர்கள் போட்டிகளை காண முடியாத நிலையில், இந்த ஆண்டு பல்வேறு ஏற்பாடுகளுடன் பிரமாண்டமான நெல்லை கிரிக்கெட் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.

  முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

  இந்நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களின் பட்டியல் டி.என்.பி.எல் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கெளசிக் காந்தி கேப்டனாக செயல்படவுள்ளார். மேலும் அந்த அணியில் அலெக்சாண்டர், அருண், அருண் குமார், ஹரிஷ் குமார், ஜெகதீசன், ஜெகன்நாத் ஸ்ரீனிவாஸ், கவுசிக் காந்தி, நிலேஷ் சுப்பிரமணியம், பிரசித் ஆகாஷ்,ராதாகிருஷ்ணன், ராகுல், சாய் கிஷோர், சாய் பிரகாஷ், சந்தீப் வாரியர், சசிதேவ், சதீஷ், சித்தார்த், சோனு யாதவ், சுஜய், விஜய் குமார், கார்த்திக், மதன் குமார் ஆகிய 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

  இந்த தொடரின் இறுதிப் போட்டி கோவையில் ஜூலை 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • மித்தாலி ராஜ் இந்திய அணிக்காக 232 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 7805 ரன்களும், 50.68 சராசரியும் வைத்துள்ளார்.
  • பெண்கள் கிரிக்கெட்டிற்கு வேறு வகையில் பங்களிப்பு செலுத்துவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  புது டெல்லி:

  இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

  ஒவ்வொரு பயணத்தையும் போல இந்த பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. நான் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்.

  இந்திய அணியை பல வருடங்களாக சிறப்பாக வழி நடத்தியதற்கு பெருமைப்படுகிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கை இந்திய பெண்கள் அணியையும், என்னையும் சிறந்த வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளது.

  போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், பெண்கள் கிரிக்கெட்டிற்கு வேறு வகையில் பங்களிப்பு செலுத்துவேன். என்னுடைய ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய 2வது இன்னிஸை உங்களுடைய ஆதரவுடன் ஆரம்பிக்கிறேன்.

  இவ்வாறு மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

  ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்து வந்த மித்தாலி ராஜ் இதுவரை இந்திய அணிக்காக 232 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 7805 ரன்களும், 50.68 சராசரியும் வைத்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் 13 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று உலக சாதனையை இந்தியா படைக்கும்.
  • இந்த போட்டியில் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

  புது டெல்லி:

  இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் கிரிக்கெட் டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

  இந்திய அணி இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 12 போட்டிகளில் வென்றுள்ளது. நாளை நடைபெறும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் 13 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று உலக சாதனையை இந்தியா படைக்கும்.

  இந்நிலையில் இந்த உலக சாதனை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

  நாங்கள் உலக சாதனை படைப்பது குறித்து கவனம் செலுத்தவில்லை. என்னைப் பொறுத்தவரை சாதனைகளையும், எண்களையும் பற்றி கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெற விரும்புகிறோம். நாங்கள் களம் இறங்குவதற்கு முன் எங்களை தயார் செய்துகொண்டு, பயிற்சி செய்துகொண்டு அவற்றை சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறோம்.

  வலுவான தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக களமிறங்கும்போது நம்முடைய பலமும் தெரியவரும். மேலும் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

  நாங்கள் வெற்றி பெறுவது போல விளையாடினால் வெற்றி பெறுவோம், இல்லையென்றாலும் கற்றுக்கொண்டு அடுத்த விளையாட்டை விளையாடுவோம்.

  இவ்வாறு ராகுல் டிராவிட் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பல்வேறு நாடுகள் விமான சேவையை துண்டித்துள்ளன.
  துபாய்:

  தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

  தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் போத்ஸ்வானா, ஆங்காங், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை துண்டித்துள்ளன. போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. 

  ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால், ஜிம்பாப்வேயில் நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அத்துடன், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் தரவரிசை அடிப்படையில் உலகக் கோப்பையில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டன.

  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 4ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நியூசிலாந்தில் நடைபெறுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்தில் நடைபெற்ற கிளப் போட்டியின்போது எதிரணி வீரரின் மூக்கை உடைத்த வீரருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  நியூசிலாந்தில் உள்ள கேனா கேனா பார்க்கில் கடந்த மாதம் 17-ந்தேதி வெராரோ - பரபராயுமு அணிகள் மோதின. போட்டியின்போது அணி வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

  அப்போது வெராரோ அணியின் காலெப் ஓ'கானெல் எதிரணியைச் சேர்ந்த மெக் நமராவை தாக்கினார். இதில் மெக் நமராவின் மூக்கு உடைந்தது. இதனால் காலெப் ஓ'கானெலுக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மூக்கு உடைபட்ட மெக்நமராவுக்கு நான்கு வாரங்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  வெராரே அணியின் மற்றொரு வீரர் ஜேக் கலெட்டனுக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2022-ல் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை காண வருமாறு உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கத்தார் அழைப்பு விடுத்துள்ளது. #WorldCup
  2022-ல் கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரை நடத்துகிறது. இந்த உலகக்கோப்பைக்கான சிஇஓ-வாக நாஸர் காட்டர் உள்ளார். இவர் கிரிக்கெட்டில் 1983-ம் ஆண்டும், 2011-ம் ஆண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கால்பந்து தொடரை காண வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

  இதுகுறித்து நாஸர் காட்டர் கூறுகையில் ‘‘கத்தாரில் நடக்க இருக்கும் உலகக்கோப்பை தொடர் நாம் அனைவரும் கொண்டாடதக்கதாக இருக்கும் என சொல்லலாம். உங்களை கத்தாரில் வரவேற்கும் நாளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

  இந்தியாவில் கிரிக்கெட் எவ்வளவு பெரிய விளையாட்டு என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, 1983-ம் ஆண்டு கோப்பையை வென்ற இந்திய அணியில் உள்ள வீரர்களும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் வென்ற அணியில் உள்ள வீரர்களும் உள்ளனர். கத்தார் வந்து உலகக்கோப்பை போட்டிகளை காண அவர்களுக்கு சிறப்பான அழைப்பு விடுக்கிறேன்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பீல்டிங்கில் ஜாம்பவானாக திகழ்ந்த ஜான்டி ரோட்ஸ், எல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள் பெயரை தேர்வு செய்துள்ளார். #Cricket #JontyRhodes
  கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பீல்டராக திகழ்ந்தவர் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான்டி ரோட்ஸ். இவர் 1992-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இன்சமாம்-உல்-ஹக்கை ரன்அவுட்டாக்கியதை யாரும் எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.

  இவர் கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்களை தேர்வு செய்துள்ளார். அதில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னாவிற்கு இடம் கொடுத்துள்ளார்.  ஐந்து பேர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா உடன் ஏபி டி வில்லியர்ஸ், கிப்ஸ், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சைமண்ட்ஸ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஈவன் சாட்பீல்டு தனது 68 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். #EwenChatfield
  நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஈவன் சாட்பீல்டு. வேகப்பந்து வீச்சாளரான இவர் ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லியுடன் இணைந்து விளையாடியவர். ஈவன் சாட்பீல்டு 1975-ம் ஆண்டும் முதல் 1989-ம் ஆண்டு வரை நியூசிலாந்து அணிக்காக 43 டெஸ்ட் மற்றும், 114 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 123 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 140 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.

  நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் கிளப் அணியான ஓல்டு பாய்ஸ்-க்காக விளையாடி வந்தார். கடைசியாக 1989-90-ல் முதல் தர போட்டியில் பங்கேற்ற பின்னர், கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் ஓல்டு பாய்ஸ் அணிக்காக விளையாடினார். அத்துடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

  தற்போது 68 வயதாகும் ஈவன் சாட்பீல்டு 51 வருடத்திற்கு முன் தனது 17 வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 1974-75-ல் இங்கலாந்துக்கு எதிராக டெஸ்டில் அறிமுகமானார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே பீட்டர் லிவர் பந்தை எதிர்கொள்ளும்போது, பந்து தலையை தாக்கியது. இதனால் நாக்கு உள்ளிழுக்கப்பட்டு, மயக்க நிலையை அடைந்தார். பின்னர், பிசியோதெரபி சிகிச்சை அளித்தபின் உயிர்பிழைத்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo